Agitate by burning down the Manu Dharma sastra - Periyar Dravidar Kazaham supremo.Kolathur Mani






Agitate by burning down the Manu Dharma sastra - Periyar Dravidar Kazaham supremo.Kolathur Mani


2012 Nov 26, Periyar Dravidar Kazhagam will join hands will all other like minded progressive organizations who are concerned on annihilating caste, and agitate by burning down                       the Manu Dharma. Speech by Kolathur Mani

For more than 2000 years, the brahminical Manu Dharma was the one that was controlling the people as unwritten law. The Indian Constitution came into force in 1950. This constitution too did not render complete justice to the people. Though this constitution bans untouchability, it preserves caste. By saying that customs and practices are not be changed, it upholds conservatism - Brahminism. But still, the constitution did not accept the basic social differences that the Manu dharma forced upon the people.

The Manu dharma states that all people cannot be equal. But the constitution says that all people are equal before law.

Manu dharma denied the right of education to the Sudhras. But the constitution says that all between the age of 6 and 16 should be provided with free compulsory education.

Manu dharma states that girls should be married away at a very early age (Child marriage). But the constitution says that it is a crime to marry away a girl before the age of 18.

Manu dharma states that sudhras and panchamas should not rule a country. But the constitution provides the right to anybody and everybody who are elected by the people to rule the country.

Manu dharma determines your occupation based on birth. But the constitution allow anybody to practice any occupation of their choice within the limits of law.

Hence, as the Manu dharma which states different types of justice for different classes of people, is totally against the aim and sense of the constitution. As such Periyar Dravidar Kazhagam insists that Manu dharma be banned.

In order to take forward the aim of the constitution and to implement it properly, a movement against the thoughts of Manu dharma is essential. In this situation, the action of the Brahmins and their supporters to print and spread Manu dharma, is not only against the senses of the constitution but also an attempt to strengthen the path of Manu dharma.

Though the constitution says that untouchability is a crime, the fact that it is practiced and forced upon in different forms, without any concern for the constitution, is listed down by us. We insist that the above resolutions are implemented. Also, if the Tamil Nadu Government does not take necessary action to implement the action plans put forth by Periyar Dravidar Kazhagam to annihilate Caste-Untouchability, on the day Periyar, in order to annihilate caste, burnt down that portion of the constitution that preserves caste, Nov 26, Periyar Dravidar Kazhagam will join hands will all other like minded progressive organizations who are concerned on annihilating caste, and agitate by burning down the Manu Dharma.



The resolutions passed in the Public meeting held at Tiruppur, on April 29 2012,

to mark the closure of the Campaign Tour against Casteist life style.

1. From the days of the Tamil kings till date, there exists the practice of ‘Two residential system’ of Village & Slum. In order to eliminate this ‘Two residential system’ - ‘residential untouchability’ and in order to bring to practice the aim of Periyar who declared as early as 1947 that ‘the practice of maintaining a separate residential place for the people placed is the lowest stratum of the caste structure should be banned’ and ‘in future the residential places built for those people should be built as multi storied buildings in places found inside the village’, the new Dalit Residences to be built by the TN Government should be built as multi storied buildings in the available small places in the streets where the Backward castes are living.

2. In the western districts of Tamil Nadu, when the Local governing bodies are approached for the lay out approval of newly planned townships, the Presidents of the Local governing bodies give oral instruction that none of the plots should be sold to Dalit people.  The people of the Backward castes also threaten that in such newly planned townships none of the plots should be sold to the Dalit people. Hence, though the Dalit people would have grown economically, they are unable to get relieved from the ‘Slum untouchability’ and buy a plot out of the Slum, not even on the outskirts of the village.

Hence, in the newly planned townships, Dalits should be provided reserved allocation. And, that should be accumulated in a isolated area, but should be mixed among the general allocations. The Government should enact rules that, if the Dalit who has bought the plot wants to re-sell it, it has to be sold only to a Dalit.

3. In order to ensure representation for those who have done inter-caste marriage and for their heirs in Government and Private jobs and Educational institutions, a law should be enacted with a provision for providing No Caste Quota in the reservation policy.

4. As the Public Sector is rapidly converted to Private sector, a law should be enacted to implement Caste based representations in the Multi National Companies in Tamil Nadu.

5. Apart from Reservation policy, any other representation of caste in the Names of Individuals, Streets, Commercial institutions, Marriage halls, Private Transport corporations, shops etc should be eliminated. The Government should instruct that if this is not eliminated within a stipulated time, action will be taken against them under the Prevention of atrocities on SC/ST Act.

6. The practice of employing people from their own caste by the owners of industries and mills in their institutions should be banned. Caste based representation should be ensured in all the departments including the administration division.

7. Caste based Matrimonial institutions should be banned. The Matrimonial advertisements which carry the phrases ‘Brahmins only’, ‘SC/ST Bar’, and those which mention particular caste names (Goundar, Vanniyar, Thevar etc) should be banned.

8. The marriage halls which mention ‘Vegetarian only’ with a hidden agenda to spread the Brahmin-Vegetarian culture, and to degrade the SC-BC food habits and to deny permission for SC to use the hall, should be banned. Action under Prevention of atrocities on SC/ST Act should be taken against the owners of those Marriage halls which mention ‘Vegetarian only’. Also, those who mention ‘For Vegetarians only’ while renting out their houses in towns, are practicing Untouchability in a hidden way. Hence action under Prevention of atrocities on SC/ST Act should be taken against these house owners too.

9. The book ‘Annihilation of Caste’ by Dr. B. R. Ambedkar should be added as Non-Detailed in Schools - Colleges. Also, the compilation of Periyar’s KudiArasu from 1925 - 1949 and 37 Volumes of Ambedkar’s writings are to be made available in all the Public Libraries and the libraries of all Schools and Colleges.

10. A new Ministry - new department should be formed for Annihilation of Caste. Based on the verdicts provided by the Supreme court on 19.03.2011 in Lata Singh Vs Govt. of UP and Arumuga Servai Vs Govt. of TN, and with the intention to implement those orders which include action against the District Collectors who do not show concern on the annihilation of untouchability, Safe guarding anti-caste marriages, the Department of Annihilation of Caste is to be formed. The department should be funded enough and just like the wide spread campaigns done for spreading education, vaccinations, public health etc, wide spread continuous campaigns covering street by streets, village by villages should be undertaken against caste, untouchability atrocities and discriminations.




அண்ணைக்கு அன்னை -அறிவுமதி



அண்ணைக்கு அன்னை
-அறிவுமதி




அழுகின்றேன் அம்மா
உன் தூய மகன் கருவறையைத்
தொழுகின்றேன் அம்மா

என் இனத்தை எழுப்புதற்கே
இனிய மகன் பெற்றெடுத்தாய்
இன்று
எழ முடியா நோய்தன்னை
எதற்கம்மா தத்தெடுத்தாய்?

ஈரய்ந்து மாதந்தான்
உன் பிள்ளை
உன் வயிற்றில் இருந்தான்
பின்பு, ஈழத் தாய் பெற்றெடுக்க
காடென்னும் கருவறைக்குள்
கன காலம்
கன காலம் கரந்தான்

தமிழருக்கே தெரியாமல்
தமிழருக்கே உழைத்தான்
தன் தம்பி தன் தங்கை
தமிழீழம் தனைக் காண
தன்னோடு களமாட அழைத்தான்
தம் நண்பர் கயமைக்கும்
தகவில்லார் சிறுமைக்கும்
தப்பித்துத் தப்பித்தே உழைத்தான்

சிறு துளியும் கறை சொல்ல
முடியாத வெள்ளை
எம் வேர்த் தமிழின்
சீர் மீட்கக் கருவான பிள்ளை

என் தந்தை என் அன்னை
என் பிள்ளை என்றே
எப்போதும் எப்போதும்
இவன் பார்த்ததில்லை

அவருக்குச் சொத்தாகத்
தப்பாகத் தப்பாகத்
துளியேனும் முறை மீறிப்
பொருள் சேர்த்ததில்லை

அத்தனைத் தாய்க்கும்
மகனாய் இருந்தான்
அத்தனைச் சேய்க்கும்
அன்னையாய்ச் சிறந்தான்

புலம்பெயர்ப் பிள்ளைகள்
புத்திக்குள் போனவன்
அவர்தம் பொறுக்கா குளிருக்கும்
போர்வையாய் ஆனவன்

இணையிலா இசையினில்
ஈடிலா ஆடலில்
எம் இனப் பிள்ளையை
ஈடுபடுத்தினான்

இடையறா முயற்சியால்
இடை விடா பயிற்சியால்
உடல்களில் உயிர்களில்
உயிர்த் தமிழ் ஊறிய
உளவியல் உளவியல்
மேடை நடத்தினான்

நம்முடன் வாழ்ந்தவன்
நமக்கென வாழ்ந்ததை
நாமா நாமா
நன்கறிந்தோம்

நா கூசாமல் கூசாமல்
நல்ல அத்தமிழனை
வன்முறையாளனாய்
வாய் குழறிப் பேசியே
வரலாற்றில் பெயரிழந்தோம்

தாய்மொழி அறியாத
தலைமுறை ஒன்றிங்கு
தலைவரை உணர்ந்து எழும்
அன்றுதான்
தக தக தக தக
தக தக தக வென
தமிழினம் உயர்ந்து எழும்

தன் பிள்ளை சொகுசாகத்
தப்பித்துப் போக
ஊர்ப்பிள்ளை வைத்திங்கா களமாடினான்?
போடா போடா
அவன் பிள்ளை களமாடி அழியாத புகழ்சூடி
மாவீரர் பட்டியலில் படமாகினான்

தாய்த் தமிழ்நாட்டில்
வாழ்ந்த தன்
தாயையும் தந்தையையும்
அவசரமாய் அழைத்தாங்கே
குடியேற்றினான்

மனிதமற்ற கயவர்களின்
மரண நெடி நாட்களிலே
அவர்களையும் மக்களுடன்
அலையவிட்டு அலையவிட்டு
அன்பு மகன் அதிலேயும் பழி மாற்றினான்

என்னதான் குறை சொல்ல முடியும்
அம்மா உன் பிள்ளையை
என்றுதான் எவர் வெல்ல முடியும்
இல்லையென்றா இவர் கணக்கு முடியும்
உன் பிள்ளை இல்லையென்றால்
இல்லையென்றால்
இல்லை
என்றால் எங்களுக்கு எப்படித்தான்
இக் கிழக்கு விடியும்

வல்வெட்டித் துறையிலங்கே
வாடிக் கிடப்பவளே
உன் கண் முட்டும் கண்ணீரைக்
கை நீட்டித் துடைக்கின்றோம்
தலைவர்க்குப் பால் கொடுத்த
மார்புகளின் பசி வாங்கித் துடிக்கின்றோம்

ஆயிரம் மருத்துவர்கள்
அம்மா உன் அருகிருந்துத்
தீவிர சிகிச்சைதன்னைச்
சிறப்பாகச் செய்வதற்கு
ஆவலாய்க் காத்திருந்தும்
அறமற்றக் கயவர்களின்
அணை தாண்ட முடியாமல்
அடி மனசில் அடி மனசில்
அய்யோ வெடிக்கின்றோம்

சிங்களரும் உனைத் தேடி
சிரம் தாழ்த்தி
வணங்குகிறார் அம்மா
உன் சிறந்த மகன் தூய்மைக்குச்
சிறிதேனும் இணங்குகிறார்

உறவான தாய்த் தமிழர்
ஊமையாய்ப் பார்த்திருப்போம்
உறவற்ற எவர்களையோ
அன்னையென்றும் அம்மையென்றும்
அனுதினமும் தோத்தரிப்போம்

முள்வேலிக் கம்பிக்குள்
உம் காயங்கள் கொத்திக்
கண்ணீரில் பசியாறிக்
கடல் தாண்டி வந்த
அந்தக் காகங்கள்
உம் கதையைக்
கதறி உரைக்கிறதே

ஏமாறச் சம்மதித்து
எவருக்கும் தலையாட்டும்
எந்திரமாய் ஆனதனால்
எம் சனங்கள் உம் துயரை
உமியளவும் உணராமல்
உறங்கிக் கிடக்கிறதே

உலக அற மன்றம்
ஒரு கேள்வி கேட்கலையே
உம் உரிமைக்குத் தடை நீக்க
ஒரு நீதி வாய்க்கலையே

ஒன்று மட்டும் உறுதியம்மா...
ஈழக் கதவுகளை
என் தாயே என் தாயே
உன் மகன்தான் உன் மகன்தான்
திறப்பான்
உன் ஈர விழியருகில்
என் தாயே என் தாயே
மிக விரைவில் உன் பிள்ளை
உன் பிள்ளை இருப்பான்..

பெரியார் பேசியது தமிழ் தேசியமல்ல; அவர் வலியுறுத்தியது தனித் தமிழ் நாடே! –தலைவர் கொளத்தூர் மணி.






பெரியார் பேசியது தமிழ் தேசியமல்ல; அவர் வலியுறுத்தியது தனித் தமிழ் நாடே! – தலைவர் கொளத்தூர் மணி


மீண்டும் மீண்டும் பெரியாரை கொச்சைப்படுத்தும் சில தமிழ்த் தேசியவாதிகளுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி விரிவாக பதிலளித்தார். டிசம்பர் 24 அன்று வடசென்னை பெரம்பூரில் நடந்த கூட்டத்தில் கழகத் தலைவர் ஆற்றிய உரை:

இன்று பெரியாரின் நினைவு நாளில் நாம் கூடியிருக் கிறோம். வழக்கமாக பெரிய அளவில் எடுக்கப்படும் பிறந்த நாள் விழாக்களைவிட, நினைவு நாள் விழாக்கள்தான் மிகவும் தேவையானதும், பொருத்தமானதும் என்று நாம் கருதுகிறோம். பிறந்த நாள் விழாக்களை அந்தந்த தலைவர்கள் வாழுகின்ற காலம் வரை எடுப்பார்கள். அவர்களிடமிருந்து ஏதாவது பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு இப்பொழுதெல்லாம் பார்க்கிறோம். அவர்களுக்கெல்லாம் கூச்சமாக இருக்கிறதோ இல்லையோ, அவர்களுக்கு கொடுக்கும் அடைமொழிகளை பார்த்து நமக்கு கூச்சமாக இருக்கிற அளவுக்கு, பல்வேறு அடைமொழிகளை கொடுத்து சுவரொட்டிகளிலும், பதாகைகளிலும் விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் மறைந்துவிட்ட தலைவர்களுக்கு நினைவு நாள் எடுப்பது என்பதுதான், அவர்களுடைய கொள்கைகளை, அவர்கள் ஆற்றிய தொண்டினை, அவற்றை நாம் தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டிய தேவையை, இவை எல்லாவற்றையும் எண்ணி பார்க்கிற நிகழ்ச்சியாகவும் இருக்கும். நினைவு நாள் கூட்டம் என்பதுதான் ஒரு இயக்கத்திற்கு மிகவும் தேவையானது என்ற அடிப்படையில், இன்று நாம் பெரியார் நினைவு நாள் எடுக்கிறோம்.

நம் நாட்டில் பல தலைவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். மிகப் பெரிய தலைவராக கருதப்பட்ட மனிதர்களுக்கும் மேலாக கருதப்பட்ட ‘மகாத்மா’க்களெல்லாம் வாழ்ந்திருக் கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நினைவு நாள் என்பது, அவருடைய படத்திற்கு மாலை அணிவித்து வணங்குவதை படம் பிடிக்க, செய்தியாளர்களை ஏற்பாடு செய்வது என்ற அளவோடு முடிந்து விடுகிறது. நினைவு நாள் கூட்டங்களில் அவருடைய கொள்கைகளைப் பற்றிப் பேசுவதில்லை. அவர் நம்மிடம் என்ன எதிர்பார்த்தார் என்பதையோ, நாம் அவருடைய வழியில் ஏன் செல்ல வேண்டும் என்ற தேவையை விளக்குவதற்கோ எந்த முயற்சியும் செய்வ தில்லை. தமிழ்நாட்டிலும் பெரியாருக்கு இணையாக (வயதில்) வாழ்ந்த தலைவர் ஒருவர் இருந்தார். இந்த நாட்டின் பொறுப்பில் இருந்தார். குடிஅரசு தலைவருக்கு இணையான, கவர்னர் ஜெனரலாக இருந்தார். பிறகு உள்துறை அமைச்சர், இலாகா இல்லாத அமைச்சர், முதலமைச்சர் என இருந்து ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்குள் இறந்து போன இராஜாஜி, அவர் உயிரோடு இருந்த காலத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தினர், அவரை மூதறிஞர் என்றெல்லாம்கூட பாராட்டினர். இன்று அவரைப் பற்றிப் பேச ஆள் இல்லை. சேலம் மாநகராட்சி அலுவலகம் அருகில் இராஜாஜி சிலை இருக்கிறது. அவரின் பிறந்த நாளிலும், நினைவு நாளிலும், நகராட்சி ஊழியர்கள் சலிப்போடு ஒரு மாலை அணி விக்கிறார்கள். வேறு யாரும் மாலைகூட அணிவிப்பதில்லை.

ஆனால், பெரியார் மறைந்து இவ்வளவு காலங்களுக்குப் பின்னால், முப்பத்தி ஏழு ஆண்டுகள் கடந்த பின்னாலும், அவருடைய கொள்கைகளைப் பேச, செயலாற்ற பல இயக்கங்கள், பெரியாரை இன்றும் பேசியாக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் பல இயக்கங்கள் இருப்பதை பார்க்கிறோம். பெரியார் வாழ்ந்த காலத்தில், அவரை விமர்சித்தவர்கள் கூட, இன்று பாராட்டி போற்றுவதை பார்க்கிறோம். பொதுவுடமை இயக்கங்கள் எல்லாம் அவரைப் பற்றி பேசினர். முதலாளித்துவ சிந்தனையாளர் என்று சொன்னார்கள். “அடிக் கட்டுமானத்தில்” இல்லாத சமயத்தை, சாதியைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார் என்று எகத்தாளம் செய்தவர்களெல்லாம், இன்று அவர் கொள்கைகளைத் தான் பேசிக் கொண்டிருக் கிறார்கள். அதை செயல் திட்டமாக வைத்துக் கொண் டிருக்கிறார்கள். உலகத்தில் தங்களைவிட அறிவாளி கள் யாரும் இல்லை என்று கருதிக் கொண்டிருக்கிற ஒரு இயக்கம் சி.பி.எம். கட்சி. அவர்கள் பெரி யாரைப் பற்றி செய்கிற விமர்சனங்கள் (பெரியாரை மட்டும் அல்லாமல், தமிழர், தமிழீழம் பற்றியும்) எதிராகத்தான் இருக்கும். இன்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்று வைத்துக் கொண்டு, சாதி ஒழிப்பை ஒரு செயல் திட்டமாக வைத்திருக்கிறார்கள். அதை நாம் விமர்சிக்கவில்லை; வரவேற்கிறோம். பெரியார் இறுதியாக கருவறை நுழைவு போராட்டத்தை அறிவித்திருந்தார். அனைத்து சாதி யினருக்கும் அர்ச்சகர் ஆகும் உரிமை வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்த மன்னார்குடி ராஜகோபால்சாமி கோவிலின் கருவறையில் தொண்டர்களோடு நுழையப் போவதாக அறிவித்தார். அப்போது வரவேற்றார்களோ இல்லையோ, இப்பொழுது வருகிற ஜனவரி 30-ம் நாளில், இந்திய பொதுவுடமைக் கட்சி அதே மன்னார்குடி ராஜ கோபால்சாமி கோவிலில் கருவறை நுழைவு போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம் மக்கள் கலை இலக்கிய கழகம், பெரியார் சொன்ன, சமய வழிபாட்டு இடங்களிலும் சமத்துவம், தமிழ் மொழிக்கு முன்னுரிமை வேண்டும் என்பதைப் பற்றியே பேசுகிறார்கள்.

பெரியார் 1925-க்கு முன்னால் பேசியவற்றை, சுமார் எண்பது, எண்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னால் இப்பொழுது எல்லோரும் பேச தொடங்கியிருக்கிறார்கள். ஒரு நல்ல மருத்துவர் என்பவர் நோயை துல்லியமாக தெரிந்து கொள்வார். அதுவே பாதி மருத்துவம் முடிந்தது போல என்று சொல்வார்கள். அதேபோல பெரியார், இந்த சமுதாயத்தின் நோயை மிகத் துல்லியமாக அறிந்திருந்தார். அதற்கான மருந்தை மிகச் சரியாக மக்களிடத்தில் கொண்டு போய் கொடுத்தார் என்பதை பெரியார் தொண் டர்களைவிட அவர்கள் சரியாக புரிந்து கொண்டிருக் கிறார்கள். இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம், பழுத்த மரத்தின் மீது தான் கல்லடி படும் என்று சொல்வார்கள். இப்பொழுது அரசியல்வாதிகளுக்கு தமிழ்நாடு முழுவதும் ஒரே ஒரு பழுத்த மரமாக கண்ணுக்கு தெரிவது பெரியார் தான். பெரிய தத்துவங்களை பேசுகிறவர்கள் எல்லாம், பெரியார் மீது தங்கள் விமர்சனங்களை பேச துடிக் கிறார்கள். முயற்சிக்கிறார்கள். அவர் மீது குற்றச்சாட் டுக்களை வைத்து தங்களை அறிவாளிகளாக காட்டிக் கொள்ள நினைக்கிறார்கள். தமிழ் தேச பொதுவுடமை கட்சியின் பொதுச் செயலாளர் மணியரசன் கூட, பெரியாரை தமிழ் தேசத்தின் தந்தையாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொல்லியிருக்கிறார். (அவரிடம் நாம் சான்றிதழ் கேட்டு நிற்கவில்லை) பெரியார் குழப்பமாக பேசினார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

பெரியார், தமிழ் தேசியமே பேசவில்லை. தனி தமிழ்நாடு வேண்டும் என்று தான் பேசினார் என்பதை இவர்கள் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். தமிழ் தேசியம் என்றால், ஸ்டாலினும், லெனினும் ஒரு கொள்கையை உண்டாக்கி வைத்து விட்டார்கள் என்பதற்காக பெரியார் இங்கு தனி தமிழ்நாடு கேட்கவில்லை. ரஷ்யாவில் தைத்து விட்ட செருப்பை எடுத்துக் கொண்டு இங்குள்ள காலை வெட்டியவர் அல்ல பெரியார். இங்குள்ள காலை அளந்து பார்த்து செருப்பு தைத்தார் – அதுதான் தனி தமிழ்நாடு போராட்டம். பிரிந்து செல்லும் உரிமையோடு இணைந்து வாழ விரும்புகிற சிந்தனை அவருக்கு இருக்கவே இல்லை. நாம் இணைந்து வாழ முடியாது, பிரிந்தே சென்றாக வேண்டும் என்பதை அழுத்தமாக சொன்னவர். “அருகோ” எனும் தோழர் அரு.கோபாலன் சொல்லிக் கொண் டிருக்கிறார் “திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட சேலம் மாநாட்டு நாள் அன்று காலை வரை, தமிழர் கழகம் என்று பெயர் வைப்பதாக இருந்ததாம். நீங்கள் கன்னடராயிற்றே, தமிழர் கழகம் என பெயர் வைப்பதா என்று, சத்யமூர்த்தி அய்யர் பெரியாரிடம் தொலைபேசியில் கேட்டாராம். உடனே திராவிடர் கழகம் என பெரியார் மாற்றிக் கொண்டாராம்”. சத்யமூர்த்தி அய்யர் இறந்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தான், அந்த மாநாடே நடைபெற்றது. இறந்து போனவர் எப்படி தொலைபேசியில் பேச முடியும் என நமது பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதினார். பிறகு இராஜாஜி பேசியதாக மாற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். எப்படியும் நுணுக்கமான கேள்விகளைப் பார்ப்பனர்கள்தான் கேட்க முடியும் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள் போலும். 1939 முதல் தமிழர், திராவிடர் என்பதை பற்றி பேசி விவாதிக்கப்பட்டு, பெரியார் தெளிவான விளக்கத்தையும் சொல்லியிருக்கிறார். தமிழர் கழகம் என்பது மொழி போராட் டத்திற்கு தான் பயன்படும். சமூக விடுதலை போராட்டத்தின் ஒரு பகுதி தான் மொழி போராட்டமே யொழிய, அதுவே முழு போராட்டமாகி விடாது. இந்தி எதிர்ப்பு என்பது மொழி போராட்டம் அல்ல, தமிழரின் கலை, இலக்கியம், பண்பாடு, சமயயியல் இவற்றில் ஆரியத்தை, மனுதர்மத்தை புகுத்த நினைக்கும் சூழ்ச்சிக்கு எதிரானது என்றே பெரியார் சொன்னார்.

பெரியார் மறைந்த அடுத்த மாதமே, 1974 ஜனவரியில் திராவிடர் கழகத்தால் ஒரு பிரச்சார பயணம் தொடங்கப் பட்டது. அப்பொழுது மணியம்மையார் தலைவராக இருந்த காலம். “பெரியார் அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை, அவர் போட்டு தந்த பாதையில், எவ்வித சபலங்களுக்கும் ஆளாகாமல், செய்து முடிப்போம்” என்று சூளுரையை பொதுக் கூட்டத்தில் நாங்களெல்லாம் உறுதிமொழியாக எடுத்தோம். உறுதிமொழியை எங்களுக்கு சொன்ன மணியம்மையார் மறைந்தார். அவருக்கு பின்னால் சொல்லிக் கொண்டிருந்தவர் சூளுரையை மறந்து விட்டார். இப்பொழுது நாங்கள் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது. பெரியார் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை முதலில் மக்களுக்கு தெரியப்படுத்தினால் தான், அதை பின்பற்றச் சொல்ல முடியும். பெரியாரின் நூல்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்த வீரமணி அவர்கள், நாங்கள் வெளியிட்ட பெரியாரின் நூல்களுக்கு, ‘குடிஅரசு’ தொகுப்பு வெளியீட்டுக்கு நீதிமன்றத்தில் தடை வாங்கினார். பெரியார் நீண்டகாலமாக திராவிடர் என்ற சொல்லை எவ்வளவு அழுத்தமாக பதிவு செய்திருக்கிறாரென்பது அந்த குடிஅரசு பக்கங்களை புரட்டும்போது தெரிகிறது. திராவிடர் என்ற சொல்லை இன விடுதலைக்கு, சமூக விடுதலைக்கு அவர் பயன்படுத்தினார். நம்மை அடிமையாக்கிய ஆரியத்திற்கு எதிரான சொல்லாக திராவிடத்தை பார்த்தார். அரசியல் விடுதலைக்கு தமிழ்நாடு தமிழருக்கே என்று பேசினார். சமூக விடுதலை என்று வருகிறபோது திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத் தினார்.

1944 இல் தென்னிந்திய நல உரிமை சங்கம், திராவிடர் கழகம் என மாற்றப்படுவதற்கு முன்பே, சுயமரியாதை இயக்க தலைமையோடு, நீதிகட்சி தலைமையையும் பெரியார் ஏற்றுக் கொண்டிருந்த காலத்திலேயே, பல்வேறு பகுதிகளில் திராவிடர் கழகம் என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டு விட்டன. 1942 ஆம் ஆண்டிலேயே திருச்சியில் உள்ள பொன்மலையில் திராவிடர் கழக ஆண்டு விழா கூட்டத்தில் பெரியார் கலந்து கொண்டு பேசுகிறார். 1943 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கோவையில் திராவிடர் கழகம் என்ற அமைப்பை துவங்கி வைக்கிறார். 1944 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், சேலத்தில் உள்ள செவ்வாய்பேட்டையில் திராவிடர் கழகத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா கூட்டத்தில் பேசுகிறார். திராவிடர் கழகம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் இயங்குகிறது என்றாலும், அதிகார பூர்வமாக பெயர் மாற்ற எப்பொழுது முடிவு செய்தார்கள் என்றால், சேலம் செவ்வாய்பேட்டை பகுதியிலுள்ள தேவாங்கர் பள்ளிக்கூடத்தில் நீதிக்கட்சியின் தலைமை நிர்வாகக் குழுக் கூட்டம் பெரியார் தலைமையில் நடை பெற்றிருக்கிறது. 1943 ஆம் ஆண்டு நவம்பர் மாத குடிஅரசில் (26.11.1943) அக்கூட்டத்தின் தீர்மானங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தென்னிந்திய நல உரிமை சங்கம் என்பதை, தமிழில் திராவிடர் கழகம் என்றும், ஆங்கிலத்தில் சௌத் இந்தியன் திரவிடியன் பெடரேசன் (South Indian Dravidian Federation) என்று பெயர் மாற்றப்பட வேண்டும் என்றும், கடந்த திருவாரூர் மாநாட்டில் திட்டமிட்ட படி அடுத்த ஆண்டு சேலத்தில் நடைபெறவுள்ள மாநாட்டில் இதை அறிவிப்பது என்றும் முடிவு செய்யப்படுகிறது. ஆனால் இன்று தமிழ் தேசியவாதிகள், காலையில் முடிவு செய்து, மாலையில் பெரியார் மாற்றிக் கொண்டதாக, பொய்ப் பிரசச்hரத்தை செய்து கொண்டிருக்கிறார்கள். காரணம் பெரியார் ஒரு பழுத்த மரம் என்பதுதான்.

பெரியார், திராவிட நாடு என்று சென்னை மாகாணத்தைதான் சொன்னார். நான்கு நாடுகளின் கூட்டு அரசே, திராவிட நாடு என்று அண்ணா தான் சொன்னார். அண்ணாகூட பிரிந்து செல்லும் உரிமையோடு கூடிய தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய நாடுகளின் கூட்டு அரசாகத் தான் திராவிட நாட்டை கூறினார். மொழி வழி பிரிந்தும், இன வழி கூடியும் உள்ள நாடாகத்தான் திராவிட நாட்டை கூறினார். முப்பது மாநிலங்கள் கொண்ட இந்தியாவில் இருந்து பிரிந்து செல்லும் உரிமையோடு நான்கு நாடுகள் கொண்ட அண்ணாவின் திராவிட நாட்டை ஏன் விமர்சிக்கிறார்களோ, நமக்கு புரியவில்லை.

அப்படித்தான் எல்லைப் போராட்டத்தில் பெரியார் அக்கறை காட்டவில்லை என்றும், இப்பொழுது ஒரு பிரச்சாரம் செய்து வருகிறார்கள். 1953 இல் ஆந்திரா பிரிந்தபோதுதான் இந்த சிக்கல் வந்தது. அப்போது நடந்த இரு நிகழ்ச்சிகளில் ஒன்று, திருத்தணியில் நடந்த ஒரு எல்லைப் போராட்டம், மற்றொன்று சென்னை நகரை ஆந்திராவுக்குக் கேட்டார்கள் என்பது. இதில் பெரியார் என்ன நிலைப்பாடு எடுத்தார் என்றால், 1956 ஆம் ஆண்டு, வேலூரில் ஒரு கூட்டத்தில் பெரியார் பேசுகிறார், எல்லைப் போராட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளவில்லையே என்ற கேள்வி வருகிறது. அதற்கு அவர் விளக்கம் அளிக்கிறார். “முதல் கூட்டத்தில் ம.பொ.சி. உட்பட நாங்கள் எல்லோரும் கலந்து கொண்டோம். எல்லைப்போராட்டத்தைப் பற்றி பேசினோம். அப்போது நான் ஐந்து திட்டங்களை முன் வைத்தேன். எல்லைப் போராட்டத்தில் கலந்து கொள்ள தயார். இந்தப் போராட்டத்தோடு இந்தி எதிர்ப்பையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். படை, போக்குவரத்து, வெளியுறவு துறை தவிர அனைத்து அதிகாரங்களும் மாநிலத்திற்குதான் இருக்க வேண்டும். சென்னை ராஜ்யம் என்பதை தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட வேண்டும். காங்கிரஸ் கட்சி தட்சிண பிரதேசம் என்ற அமைப்பை உருவாக்க நினைக்கிறது அதை எதிர்க்க வேண்டும்” – என்று.

இந்த ஐந்து கோரிக்கைகளில், தமிழ் தேசியத்திற்கு எதிராக எதுவும் இல்லை. ஆனால், தமிழ் தேசத்தின் தந்தையாக கருதப்படுகிற ம.பொ.சி. சொன்னார் – அவர், “நான் இந்தியன் என்பதால் இந்தி மொழியை ஏற்றுக் கொள்கிறேன். நான் இந்து என்பதால் என் சமய சடங்குகளில், சமஸ்கிருதத்தை ஏற்றுக் கொள்கிறேன்” என்றவர். இதை இரண்டையும் எதிர்த்த பெரியார் வைத்த அந்த கோரிக்கைகளுக்கு, “கம்யூனிஸ்டுகள் ஏற்றுக் கொள்ளவில்லை, எனவே வேண்டாம்” என ம.பொ.சி. சொன்னார். ம.பொ.சி. உயிரோடு இருந்த காலத்தில் பெரியார் இதை பதிவு செய்துள்ளார். தாராளமாக நீங்கள் போராடுங்கள், நாங்கள் உங்களோடு இணைந்து நிற்க முடியாது என்று பெரியார் தெரிவித்து விட்டார்.

அதன் பின்னால் சென்னையைப் பற்றி விவாதம் வந்தபோது தான், நான் விஸ்தீரணத்திற்கு போராடுபவன் அல்ல. விடுதலைக்கு போராடுபவன் என்று அழுத்தமாக பெரியார் சொன்னார். இருந்தாலும் இதில் ஏன் சம்பந்தப் பட்டிருக்கிறேன் என்றால், மொழிவாரி என்று பேசுகிறவர்கள், மொழிவாரியாக பிரிந்துவிட்டு, மொழி அல்லாத நாட்டிலும் ஆதிக்கம் செலுத்த பார்க்கிறார்களே என்ற கருத்துதானே அல்லாமல், மற்றபடி சென்னை நகரம் தமிழர்களுக்கோ, தமிழ்நாட்டிற்கோ பெரிய தொண்டு செய்திருக்கிறது. செய்து வருகிறது. அல்லது செய்ய முன்வரும் என்பதற்காக அல்ல என்று பேசியிருக்கிறார். இந்த இரண்டையும் சொன்ன பெரியாரின் கருத்துகளை, எங்கள் பழைய தலைவர் (வீரமணி) மக்களிடம் கொண்டு சேர்த்திருந்தால், இந்த தமிழ் தேசியவாதிகள் சொல்லும் புரட்டுகளை மக்கள் புரிந்திருப்பார்கள். பெரியாரின் கொள்கைகள் திடலுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறது. வெளியே கொண்டு வருபவர்களையும், தடுக்க பார்க்கிறார்கள். குடிஅரசு வழக்கில் பார்த்திருப்பீர்கள். உச்சநீதிமன்றத்தில் தொடுத்த மேல் முறையீட்டு மனுவை விசாரணைக்கே தகுதி அற்றது என்று தள்ளுபடி செய்த செய்தி, வீரமணி அவர்களுக்கு பிறந்த நாள் பரிசாக கிடைத்தது. கோரிக்கைளை மாற்றிக் கொள்கிறோம் என்ற மனுவை, இப்பொழுது உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து பெரியார் நினைவு நாள் பரிசாக அவருக்கு கொடுத்திருக் கிறது.

பெரியார் கொள்கைகளை எடுத்துச் சொல்லுகிற, நடைமுறைபடுத்துகிற, பெரியாரின் வழியில் தொடர்ந்து போராடுகிற இயக்கமாக, பெரியார் திராவிடர் கழகம் இருக்கிறது. எங்களுக்குள்ள இயக்கமாக, பெரியார் திராவிடர் கழகம் இருக்கிறது. எங்களுக்குள்ள சக்தி குறைவாக இருந்தாலும், அதை முழுமையாக பயன்படுத்தி, செயல்படுத்த வேண்டும் என்று கருதுகிறோம். அதன் வெளிப்பாடாகத்தான், பல போராட்டங்களை நடத்துகிறோம். அண்மையில் ஆயுத பூஜை அன்று கூட ஒரு போராட்டம் நடந்தது. அரசியல் சட்டம் எழுதப்பட்ட போதே, இது மதசார்பற்ற நாடு என்று எழுதி விட்டார்கள். அரசு அலுவலகங்களை கோவிலாக்காதே, கடவுள் படங்கள் இருந்தால் அகற்றுங்கள் என அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது ஆணை பிறப்பித்தார். அதன் பின்னர், அடிக்கடி கலவரம் ஏற்பட காரணம் என்ன என்பதை கண்டறிய, 1994 ஆம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சி காலத்தில், உள்துறை மூலமாக ஒரு குழுஅமைக்கப்பட்டது. அரசு அலுவலகங்களில் மதம் கலப்பதுதான் இதற்கு காரணம் என அந்த குழு அறிவுறுத்தியது. அரசு அலுவல கங்களில் கடவுள் படங்களை நீக்கவும் மத வழிபாடுகள் கூடாது என்றும், மத சுலோகங்கள் எழுதப்படக் கூடாது என்றும், மத வழிபாட்டிடங்களை கட்டக் கூடாது என்றும் இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது. தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சி நடக்கிறது. தலைமை செயலாளர் இப்போது இருப்பதை போலவே அப்போதும் ஒரு பார்ப்பனர்தான் (ஹரி பாஸ்கர்). அவர் அனைத்து அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மீண்டும் 2004 ஆம் ஆண்டு எ.டி.ஜி.பி.யாக இருந்த லத்திகாசரண் (இப்போது டி.ஜி.பி.), காவல் துறையின் அனைத்து பிரிவுகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் குறிப்பாக காவலர் குடியிருப்புகளில்கூட மதவழிபாடு நடத்தக் கூடாது என்று உள்ளது. இவ்வளவு இருந்தும் தொடர்ந்து காவல் நிலையங்களில் ஆயுதபூஜை நடைபெற்று வந்தது. இவ்வாறு இந்த ஆண்டும் நடக்குமேயானால், அதை தடுக்கும் நேரடி நடவடிக்கையில் இறங்குவோம் என, பெ.தி.க. தலைமை செயற்குழுவில் நிறைவேற்றிய தீர்மானத் தின்படி, பல இடங்களில் எங்கள் தோழர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சென்னையிலும், மேட்டூரிலும் தடுத்து, வழக்குகளை சந்தித்தார்கள். பெரியார் வன்முறையை விரும்ப மாட்டார் என்று அப்போது பலர் சொன்னார்கள்.

ஆனால், பாரதிதாசன் பாடல்களை பாட நூல்களில் சேர்க்கப்பட வேண்டும் என்ற செய்திகளைக் குறிப்பிட்டு விட்டு, “எனக்கு பின்னால் இதை சொல்லவும் ஆள் இல்லை, தி.மு.க.வை தவிர இதை செய்யவும் கட்சியில்லை. அரசு அலுவலகங்களில் கடவுள் படங்களை அகற்றாவிட்டால், நானும் எனது தோழர்களும் உள்ளே நுழைந்து அகற்றுவோம்” என, 1968 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பெரியார் விடுதலை நாளேட்டில் ஒரு அறிக்கை விடுகிறார். அதை இன்று நாங்கள் செய்திருக்கிறோம்.பெரியார் அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை, அவர் போட்டு தந்த பாதையில், எவ்வித சபலங்களுக்கும் ஆளாகாமல், செய்து முடித்திருக்கிறோம். இது தானே நாம் பெரியார் மறைந்த வுடன் எடுத்த உறுதிமொழி.

நாம் யாரை ஆதரிப்பது, எதிர்ப்பது என்பதில் பெரியாரின் நிலைபாடு என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். எப்பொழுதும் பெரியார் ஆளுங்கட்சியை ஆதரிப்பவர் என்று பார்ப்பனர்கள் சொல்லி கொண்டிருந் தார்கள். காங்கிரஸ் கட்சியை எதிர்த்த வண்ணம் இருந்த பெரியார், 1954 இல் காமராசர் வந்தவுடன் ஆதரித்தார். அடுத்து தி.மு.க.வை ஆதரித்தார் அவ்வளவுதான்.

காமராசர் ஆட்சியின்போதுகூட காங்கிரசை ஆதரிக் கிறேன் என்பது தவறு. காமராசரைத் தான் ஆதரிக்கிறேன் என்று பலமுறை தெளிவாக கூறியிருக்கிறார். காமராசருக்கு பின், ஆட்சிக்கு வந்த பக்தவத்சலத்தை எதிர்த்து, 1965இல் பக்தவச்சலம் ஆட்சி கண்டன கூட்டம் நடத்தியவர் பெரியார். எப்பொழுதும் ஆளுங்கட்சியை ஆதரிப்பவர் என்று சொல்லப்பட்டபோது, “எனது கொள்கை ஆதரவு மாற்றத்திற்கான காரணம்” என்ற தலைப்பில் 19.9.1968 இல் ஒரு அறிக்கை எழுதினார். எனது ஆசை யெல்லாம் மக்கள் பகுத்தறிவுவாதிகளாக (நாத்திகர்களாக) ஆக வேண்டும். சாதி ஒழிய வேண்டும். உலகில் பார்ப் பனர்கள் இருக்கக் கூடாது. பல கட்சிகளை ஆதரித்ததும் இதற்காகத்தான். இனி எந்த கட்சியை ஆதரிப்பேனோ, எதிர்ப்பேனோ, எனக்கே தெரியாது” என்று எழுதி விட்டு, கீழே குறிப்பு என்று ஒன்று எழுதுகிறார். அதில், “இந்த மூன்றுக்கும் தி.மு.க. எதிரியானால், என் நிலை இப்படியே இருக்கும் என்று சொல்ல முடியாது” என்று எழுதியுள்ளார். அண்ணா ஆட்சியில் இருக்கும்போதே இதை எழுதி யுள்ளார். கல்வித் துறை உட்பட எந்த துறையில் பார்ப்பனர்கள் இருந்தாலும், பெரியார் உடனடியாக “விடுதலை” நாளேட்டில் பட்டியல் போட்டுவிடுவார். ஆட்சியாளர்கள் மாற்றிக் கொள்வார்கள். எனவே தவறு நடந்தால் பட்டியல் போட்டு சுட்டிக்காட்ட ஒருவர் வேண்டும்.

இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்

கெடுப்பார் இலானும் கெடும்…. என்கிறார் திருவள்ளுவர்.

ஒரு ஆட்சிக்கு ஜால்ரா அடிப்பதல்ல பெரியார் தொண் டனின் வேலை. 2001 முதல், இந்த நாட்டில் தொடர்ந்து யார் தலைமை செயலாளராக இருக்கிறார்கள்? பாப்பாத்தி ஆட்சியைகூட விட்டுவிடுங்கள். ‘திராவிடர்கள்’ ஆட்சி வந்த பின்னால், திரிபாதி, ஸ்ரீபதி, மாலதி உட்பட எல்லோரும் பார்ப்பனர்கள். இந்த நாட்டின் தலைமை செயலாளராக தொடர்ந்து பார்ப்பனர்களே இருந்தால் நமக்கு என்ன நடக்கும்? இதை சுட்டிகாட்ட வேண்டாமா? சுட்டிக்காட்டாமல் இருப்பது தவறு என்றுதான், எங்கள் பங்காளி இயக்கத் திற்கு சொல்கிறோம். கல்லூரி முதல்வராக இருந்தபோது ஆய்வுக்கு வந்த அதிகாரிகளை சரிசெய்ய மாணவிகளை அனுப்பி வைத்ததாக இரண்டு முறை குற்றம்சாட்டப்பட்ட மீனா என்ற ஒரு பார்ப்பன அம்மையார், திருச்சி பாரதி தாசன் பல்கலைக் கழகத்திற்கு இப்போது துணைவேந்தராக வந்துள்ளார். உடனே இவ்வளவு காலம் இயங்கி வந்த ‘பெரியார் உயராய்வு மய்யம், பாரதிதாசன் உயராய்வு மய்யம்’ உடனடி யாக மூடப்பட்டுவிட்டது. நாம் யாருமே போராடத் தான் இல்லை.

பெரியாரின் முதல் கொள்கையாக இருந்தது சாதி ஒழிப்பு. காங்கிரஸ்காரராக இருந்தபோதே, கோவிலை சுற்றியுள்ள வீதிகளில் நடக்க அனுமதி மறுக்கப்பட்டபோது, அது மலையாள நாடாக இருந்தபோதும், அங்கு சென்று போராடினார். அப்போது, தென்னாட்டில் நடந்த இரண்டு சம்பவங்கள் என் மனதை உலுக்கியது என்றும், அதில் ஒன்று வைக்கத்தில் இராமசாமி நாய்க்கர் நடத்திய போராட்டம் என்றும் புரட்சியாளர் அம்பேத்கர் தனது ஏட்டில் தலையங்கம் எழுதினார்.

1922 ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராக இருந்தபோது, தாழ்த்தப்பட்டவர் களையும், நாடார்களையும் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று, திருப்பூர் மாநாட்டில் தீர்மானம் கொண்டு வந்தார். பின்னாளில் கோவில் நுழைவு போராட்டம் நடத்தி யதாக சொல்லப்பட்ட வைத்தியநாத அய்யர் இராமா யணத்தையும் மனுதர்மத்தையும் எடுத்துக் காட்டி, அப்போது கோயில் நுழைவை எதிர்த்துப் பேசினார். இராமாயணமும் மனுதர்மமும் என் மக்களை கோவிலில் நுழைய தடுக்குமே யானால், அதை எரிக்க வேண்டும் எனப் பேசினார் பெரியார். சுயமரியாதை இயக்கம் தொடங்கியவுடன், சாதி ஒழிப்பு வேலைகளைத் தான் செய்தது. 1926 முதல் பெண்ணுரிமையைப் பற்றிப் பேசினார். 1928 இல் இருந்து பொதுவுடமையைப் பற்றிப் பேசினார். 1938 இல் தனி தமிழ்நாட்டைப் பற்றி பேச தொடங்கினார். பெரியார் தொண்டர்கள் என்பவர்கள் இந்த நான்கு கொள்கைகளை முன்னெடுத்து செல்வோர் தான்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமை வேண்டும் என்ற பிரச்சினையைப் பற்றி உங்களுக்கு தெரியும். 1971 இல் கலைஞர் சட்டம் போட்டார். 234 சட்ட மன்ற உறுப்பினர்களும் ஒரு மனதாக ஏற்றுக் கொண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அது. ஒட்டு மொத்த தமிழகமும் ஏற்றுக் கொண்டதை, பதினொரு பார்ப்பனர்கள், பதிமூன்று வழக்குகளை உச்சநீதிமன்றத்தில் தொடுத்தார்கள். அப்போது தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும், அதே நேரத்தில் பார்ப்பனர் அல்லாதாரை நியமித்தால் என்னிடம் வா என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொன்னது. ‘ஆபரேசன் வெற்றி, நோயாளி மரணம்’ என பெரியார் சொன்னார். பி.வி.கானே என்ற ஒருவன் ஒரே ஒரு புத்தகம் எழுதினான் (சட்டபுத்தகம் அல்ல). இந்து சட்டங்கள் பற்றிய தொகுப்பு எழுதினான். அதை வைத்து தீர்ப்பு சொன்னார்கள். பெரியார் நூற்றாண்டு விழாவில் எம்.ஜி.ஆர். ஒரு குழு அமைத்தார். ஆய்வு செய்தார்கள். கலைஞர் ஆட்சிக்கு

வந்து அர்ச்சகர் பயிற்சி கொடுத்தார். எல்லாம் முடிந்தது. மீண்டும் பார்ப்பனர்கள் தடை ஆணை வாங்கிவிட்டார்கள். நீதிமன்றம் சொல்லிவிட்டது. நான் என்ன செய்வது என கலைஞர் இப்போது சொல்லிவிட்டார்.

ஆனால், சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ உறுப்பினராக இல்லாத பெரியார், தேர்தலில் போட்டியிடக் கூடாது என்ற கொள்கையோடு வைத்திருந்த இயக்கத் தோழர்களை கொண்டு பெரியார் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தத்தை கொண்டு வந்தார். எனவே நாம் மக்களை திரட்டி போராடியிருக்க வேண்டும். கேரளாவில் ராகேஷ் என்ற தாழ்த்தப்பட்டவரை அர்ச்சகராக்கியதற்கு, ஆதித்யன் என்ற பார்ப்பான் வழக்கு தொடுத்தான். மாவட்ட நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும், மனுவை தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்றத்தில் பராசரன் வாதாடினார். இந்தியாவில் அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்ட பின்னால், சமவாய்ப்புகளை மறுக்கும் சாஸ்திரம் உட்பட எதுவும் செல்லாது என தீர்ப்பு சொல்லப்பட்டது. தீர்ப்பைச் சொன்னவர்கள், தமிழ்நாட்டை சார்ந்த துரைசாமி ராஜூ, கர்நாடகத்தில் பிறந்திருந் தாலும், தமிழ்நாட்டில் படித்து, பகுத்தறிவு பெற்ற ராஜேந்திரபாபு நீதிபதிகளாக இருந்தார்கள். தென்னாட்டைச் சார்ந்தவர்கள் சட்டம் தான் பெரிது என்றார்கள். ஆனால், நமக்கு எதிராக தீர்ப்பு சொன்ன வடநாட்டு பார்ப்பனர்கள், சாஸ்திரம் தான் பெரிது என்கிறார்கள்.

உங்களுக்கு சாஸ்திரம் பெரிது என்றால், எங்களுக்கு தமிழர்களுக்கு, குறைந்தபட்சம் இறை நம்பிக்கையுள்ள தமிழர்களுக்கு, திருமூலம் பெரிது. திருமூலர் சொல்கிறார்,

“பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சிக்கில்

போர்கொண்ட மன்னர்க்கு பொல்லா வியாதியாம்

பார்கொண்ட நாட்டுக்கு பஞ்சமுமாம் என்றே

சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத்தானே”

பார்ப்பான் பூஜை செய்தால், நாட்டில் பஞ்சம், ஆட்சி செய்கிறவர்களுக்கு நோய் வரும் என்கிறார் திருமூலர்.

அதேபோல தொல்காப்பியம், பார்ப்பனர்களுக்கு என்ன வேலை என்பதை சொல்கிறது.

காமநிலை உரைத்தலும், தேர்நிலை உரைத்தலும்,

கிழவோன் குறிப்பினை எடுத்தனர் மொழிதலும்,

ஆவொடு பட்ட நிமித்தங் கூறலும்,

செலவுறு கிளவியும் செலவழுங்கிளவியும்

அன்னவை பிறவும் பார்பார்க்கு உரிய.

என்ன பொருள்? ஒருவரின் காம உணர்வை அவன் விரும்பும் பெண்ணிடம் கூறுவது, பிரிந்து சென்ற தலைவன் வந்து கொண்டிருக்கிற தேர் வரும் நிலைகளைச் சொல்வது (அதோ உன் காதலர் வந்து விட்டார், கார் ஹார்ன் சத்தம் கேட்கிறது பார் என்பது போல), மாட்டை வைத்து நல்லது கெட்டது கூறுவது (தலையாட்டி விட்டது, சாணம் போட்டுவிட்டது, சிறுநீர் கழிக்கிறது – இது நல்லது கெட்டது என்று கூறுவது);, செலவுறு கிளவி – இப்போது செல்ல லாம் – அப்பா வெளியூர் போயிருக்கிறார். அம்மா கோவிலுக்கு போயிருக்கிறார். அவள் தனி யாகத்தான் இருக்கிறாள் என்பது போல – செலவழுங்கிளவி – செல்லக் கூடாது என்ற செய்தி கூறுதல் (அவன் அண்ணன் கல்லூரியில் இருந்து விடுமுறையில் வந்திருக்கிறான். இன்று அந்த பக்கம் போய்விடாதே – உதைத்தான் விழும் என்பது போல…) இவைகள் தானய்யா தொல்காப்பியர் பார்ப்பனருக்குரிய வேலைகள் எனக் கூறுகிறார். பூஜை செய்வதை அல்ல….

அவ்வையார் சொல்கிறார்

“நூலெனிலோ கோல்சாயும் நுந்தமரேல் வெஞ்சமராம்,

கோலெனிலோ பாங்கே குடிசாயும் – நாலாவான்

மந்திரியுமாவான், வழிநடைக்குத் துணையும் ஆவான்,

அந்த அரசே அரசு”…

என்று! பார்ப்பான் ஆட்சி செய்தால் காட்டிக் கொடுத்து நாடு கெட்டுவிடும். சத்ரியன் ஆட்சி செய்தால், சண்டையாகவே இருக்கும். வைசியன் ஆட்சி செய்தால் வரி போட்டே ஒழித்து விடுவான். சூத்திரன் ஆள்வதுதான் நல்ல அரசு.

தமிழ்நாடு தனிநாடாக இருந்தால் இவைகளெல்லாம்தானே சட்டமாக இருந்திருக்கும். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமைக்கு எந்த தடையும் வந்திருக்காதே!

பெரியார், காரைக்குடி காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை தாங்கி பேசுகிறபோது சொல் கிறார், “பறையன், சக்கலியன் என்பதைவிட சூத்திரன் (வேசிமகன்) என்பவன் தாழ்ந்தவன் என்பதுதான் எனது கொள்கை. குடிப்பதற்கு தண்ணீர் தராமல், அவன் குளிக்கவில்லை என்று சொல்வது உன் தவறா? அவன் தவறா? என்று கேட்டார். இப்படி வாழ்கிறபோது இருக்கிற சாதி கொடுமை, இறந்த பின்னால் சுடுகாட்டிலும் இருக்கிறது. இதை ஆதிக்க சாதிகள் மட்டும் அல்ல, அரசும் செய்கிறது.

அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் கட்டப்படும் சுடுகாட்டில், தாழ்த்தப்பட்டவர் சுடுகாடு, இதரர் சுடுகாடு என பிரித்து வைத்திருக்கிறார்கள். தீண்டாமை வன்கொடுமை சட்டம் யார் மீது பாய வேண்டும்? மாவட்ட ஆட்சி தலைவர், திட்ட அலுவலர், வட்டார அதிகாரிகள் மீதல்லவா பாய வேண்டும்? தீண்டாமையை ஒழிக்கிறேன் என போலித்தனமாக பேசிக் கொண்டிருந்த, காந்தி பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் நாள், போராட்டத்தை எடுத்தோம். அப்போது, குறைந்தபட்சம் அரசு திட்டங்களில் கட்டப்படும், இரட்டை சுடுகாடுகளையாவது அகற்றுங்கள் என்று பெரியாரின் சிந்தனைகளை ஆட்சியில் நடைமுறைபடுத்த வேண்டும் என்று சொன்ன அண்ணா அவர்களின் நினைவுநாள் வரை அரசுக்கு ஒரு கால அவகாசத்தை கொடுத்தோம். பெரியார் நினைவு நாளில், பெரியாரின் விரல் பிடித்து அரசியல் நடை பயின்ற, கலைஞரிடம் நாம் வைக்கிற வேண்டுகோள், உங்களை ஆளாக்கி, அமைச்சரவையில் உட்கார வைத்த அண்ணா நினைவு நாளுக்குள் குறைந்தபட்சம் அரசு திட்டத்தில் கட்டப்பட்ட சுடுகாடுகளில், இடுகாடுகளில் இருக்கும், இடைச் சுவரை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால், சட்டவிரோதமாக இருக்கும் இடைச் சுவரை, சட்டத்தை நடைமுறைபடுத்தும் நோக்கத்தோடு, பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் உள்ளே நுழைந்து சுவரை உடைப்பார்கள் என்பதை அறிவிக்கிறோம். தாழ்த்தப்பட்டோர் சுடுகாடு, இதரர் சுடுகாடு என்று இரட்டை சுடுகாடுகளை அரசே அமைக்கலாமா? இது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி குற்றமல்லவா? இரட்டைக் குவளை உடைப்புப் போராட்டத்தின்போது அரசு நம்மை கைது செய்தது. இப்போது என்ன செய்யப் போகிறது என்பதை பார்க்கலாம். பெரியார் நினைவு நாளிலும், வழக்கமாக நாங்கள் வைக்கும் கோரிக்கை இதுதான்.

சிந்திக்க முடியாத மூடன் – சிந்தித்து சரியெனப்பட்டதை செயல்படுத்த முன் வராத அறிவாளி, இருவருக்கும் என்ன வேறுபாடு? எனவே நாங்கள் சொன்னதையெல்லாம் சிந்தித்து உங்களுக்கு சரியெனப்பட்டால் – எல்லாம் சரிதான்… இருந்தாலும்… என்றாலும்… என்று வீட்டை, ஊரை, உறவுகளை காட்டி பின்வாங்காமல் சரியெனப்பட்டதை நடைமுறை படுத்த அனைவரும் முன் வாருங்கள் எனக் கூறி விடைபெறுகிறேன்

வீரமணி கும்பலின் பகற்கொள்ளை!




பெரியார் சொத்துக்களை வீரமணியும், அவரது திருமகனார்.அன்புமணியும் கபளீகரம் செய்துவருவது பெரியார் தொண்டர்கள் அனைவரும் அறிந்த விடயம்.

மேற்சொன்ன செய்தியை தகுந்த ஆதாரத்தோடு,தினமணி(24/12/2010) வெளியிட்டுள்ளது.

கரகாட்டகாரன் வாழைப்பழ காமெடிக்கு பிறகு, தமிழக மக்கள் அதிகம் ரசித்து,ரசித்து...சிரித்த நகைச்சுவை

பொழுதுபோக்கிற்கு கூட "அழுவாச்சி"சீரியல் பார்த்து கண்ணீர்துளிகளை கொட்டி, கண்ணீர்த்துளிகளிடம் காசை கொட்டச் செய்வது தமிழக மக்களில் பெரும்பான்மையினர்.

பொழுதுபோக்கில் கூட நம்மைப் போன்றோர் சிறுபான்மை.

கவுண்டமணி-செந்தில்,விவேக்,வடிவேலு, சந்தானம் காமெடி, அசத்தப்போவது/கலக்கப்போவது யாரு?,லொள்ளுசபா, மீண்டும்மீண்டும் சிரிப்பு எல்லாம் பார்த்து சலித்துப்போன நமக்கு ஒரே ஆறுதல் விடுதலை பேப்பரும்,அதன் ஆசிரியர் கடலூர்.வீரமணியும் தான்!

கடந்த ஜீன் 9 ந்தேதி, பெரியார் தி.க குடிஅரசை வெளியிட தடை நீக்கி, வீரமணியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திராவிடர் கழக 'தல' யாக இருந்த வீரமணி கெட்டப் மாத்தி பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளராக அறிக்கை விட்டார். (10/06/2010- விடுதலை)

அப்படி பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளராகவே, அந்த "Character" வே வாழ்ந்துட்டார்.

2 ஆண்டுகள் வழக்கு நடத்தி,தோற்றப் பிறகு " அனுமதி பெற்று பெரியார் எழுத்தை, பேச்சை வெளியிடத் தடை எப்போதும் கிடையாதே! " என்கிறார்.

ஆனா, அந்த அனுமதிக்கு இவருக்கு 15 லட்சம் தண்டம் கட்டனுமாம்.

அம்பேத்காரை எல்லாம் இழுத்து, அடைப்புக்குறிக்குள் இங்கிலீஸ் எல்லாம் எழுதி பிச்சு உதறிட்டாரு இந்த MA BL,

தீர்ப்பு சொல்லிய பிறகும், பிரதான வழக்கை விசாரிக்கவே இல்லை என்று அடம் பிடிக்கிறார்.

15 லட்சத்தை அவரால மறக்க முடியல.

நல்லவேளை! பிரதான வழக்கை விசாரித்து, 15 லட்சம் தருவாங்க என்று நினைத்து வீரமணியும்,அன்புராஜீம் துண்டை விரித்து அய்க்கோர்ட்டு வராண்டாவிலே தூங்கி காமெடி பண்ணாமல் 27 லட்ச ரூபாய் காரில் வீட்டுக்கு போனது நமக்கெல்லாம் ஆறுதலான விஷயம்.

ஜீலை 2 ந் தேதி, அவரது 27 லட்ச ரூபாய் காரின் கண்ணாடி உடைந்துவிட்டதால், திராவிடர் கழகத் தலைவராக கெட்டப் போட்டு செம அறிக்கை வெளியிட்டார் கடலூரார். (03/07/2010 -விடுதலை)

கரகாட்டகாரன் வாழைப்பழ காமெடிக்கு பிறகு, தமிழக மக்கள் அதிகம் ரசித்து,ரசித்து...சிரித்த நகைச்சுவை இதுவாக தான் இருக்கும்.

கழகத் தோழர்கள் பதற்றம் அடையவேண்டாம். சட்டம், அதன் கடமையைச் செய்யும் என்ற முழு நம்பிக்கை நமக்கு உண்டு. ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என்பது போன்ற எந்த நடவடிக்கையிலும் ஆத்திரப்பட்டு இறங்கிவிடக் கூடாது.

முதிய இளைஞர்களையே(95, 98 வயது ஆனவர்கள்), தொண்டர்களாக கொண்ட தி.க தலைவரின் அறிக்கையை பெரியார் தி.க ஏடான பெரியார் முழக்கம் "சுவை" கருதி வெளியிட்டு மகிழ்ந்தது.

அன்று முழுவதும், விடுதலை அலுவலகத்தில் ஊழியர்கள் எதற்கோ சிரித்திருந்தாலும், நம்மள வைத்து தான் காமெடி,கீமெடி பண்றாங்களோ என்று நினைத்து அவரும் சிரித்திருப்பார்.

கலைஞர் அரசினைக் காக்க வேண்டியதே வீரமணியின் முதற்கடமையாம்! அய்யாவின் பணி முடிப்பது அவரது லிஸ்டில் எத்தனையாவது கடமை என்று மேலாளர்.சீதாராமனை தான் கேட்க வேண்டும்.

துள்ளும் துரோகத்தின் முதுகெலும்பு தூள் தூளாகும் என அவரது அறிக்கையினால்(13-ஜீலை-2010-விடுத்லை) வீரமணிக்குள் இத்தனை நாள் தூங்கிக் கொண்டிருந்த மிருகம் முழித்துக் கொண்டதோ என தமிழ்நாடே டரியல் ஆகிவிட்டது.


பெரியார் சொத்துக்களை பெரியார் தி.க மீட்கப் போவது ஒரு புரூடா மிரட்டல் என்று முறைப்பாக அறிக்கை விட்டாலும், உள்ளுக்குள் உதறல் தான்!

அதனால் தான்........

குடிஅரசு தொகுதிகள் 1933 ஆம் ஆண்டுவரைக்கும் உரியவை வெளியிடப்பட்டுள்ளன;(பெரியார் தி.க 1938 வரை வெளியிட்டது)

காலவரிசைப்படி பெரியார் களஞ்சியம் 32 தொகுதிகள் கடவுள், மதம், பெண்ணுரிமை, ஜாதி _ தீண்டாமை என்கிற தலைப்புகளில் வெளிவந்து நாடு தழுவிய அளவில் பரப்பப் பட்டுள்ளன!

ஞானசூரியன், இராமாயண ஆராய்ச்சி, பாரத ஆராய்ச்சி, கீதையின் மறுபக்கம், புராணங்கள், மதவெறி அமைப்புகள் பற்றிய ஆதாரபூர்வ விளக்கம் _ சமூகநீதி, வகுப்புவாரி உரிமை; கோவூரின் பகுத்தறிவுப் பாடங்கள் தொடங்கி வாழ்வியல் சிந்தனைகள் வரை பல்வேறு துறை-களின் கலங்கரை விளக்கமாக _ பல்லாயிரக்-கணக்கில் பரப்பப் பட்டு வருகின்றன.

பெரியார் மய்யம் புதுடில்லி தலைநகரில்; அமெரிக்கா போன்ற நாடுகளில் பெரியார் பன்னாட்டு அமைப்பு, வடபுலங்களில் _ தென்புலங்களில் நமது கொள்கை வீச்சு-கள். இவை தவிர பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் மற்றும் பெரியார் கல்வி நிறுவனங்கள்மூலம் ஆராய்ச்சிகள் _ கருத்தரங்குகள், இப்படி கனடாவரை எங்கெங்கும் பெரியார் பிரபலப்பட்டுள்ளார்கள்
!


என்று பெரியார் தி.க கேட்காமலே வெள்ளை அறிக்கை விடுகிறார் இந்த வீரமணி.

வீரமணியின் body strong தான் ; basement கொஞ்சம் weak என்பது திராவிடர் கழகத்தின் சட்டதிட்டங்களை நன்கறிந்த வழக்கறிஞர்.துரைசாமி அவர்களுக்கு தெரியும்.

2006 ஆம் ஆண்டில் திருச்சி.திருவரங்கத்தில் திராவிடர் கழகத்தால் அமைக்கப்பட்ட தந்தை பெரியாரின் சிலை இந்து வெறியர்களால் சேதப்படுத்தப்பட்டது. பெரியார் திக வினர், அந்நிகழ்விற்கான எதிர்வினையை பார்ப்பன கேந்திரங்களில் நிகழ்த்தி காட்டினர்.

தமிழினத்தை இழிவுபடுத்தும் பூணூலை அறுத்து, தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் சிறை ஏகினர்.

பெரியார் மண்ணில்,பெரியார் தத்துவமாகவே எழுந்து நிற்கும் பெரியார் சிலைகளின் மீதான இந்து மத வெறியர்களின் வன்முறை வெறியாட்டத்திற்கு, பதிலாக திக வினரை அமைதி காக்க அறிவுறுத்தினார்.


பெரியார் சொத்து தன்னிடமிருந்து பறி போய்விடுமோ என்ற பதற்றத்தில், திக வினரை தற்கொலைப் பட்டாளங்களாக மாறச் சொல்கிறார் மானமிகு.

பெரியார் சொத்தென்றால் வாயை திற.
பெரியார் தத்துவம் என்றால் வாயை மூடு.
இது தான் கடலூராரின் அறிவு நாணய லட்சணம்.



ஜூலை 2 ஆம் தேதி,அவரது 27 லட்ச ரூபாய் பெறுமானமுள்ள காரின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இது பார்ப்பனர் மற்றும் துரோகிகளின் கூட்டுசதி- சொலவது வீரமணி.

தடை தகர்த்து வந்த அய்யாவின் குடிஅரசு நூல்களை வெளியிட்டு,பேசிய அடுத்த நாளே பெரியார் பெருந்தொண்டர்.திருவாரூர்.தங்கராசு அவர்கள் வீட்டின் மீது நடத்தப்பட்ட வன்முறை வெறியாட்டத்தின் சூத்திரதாரி யார்? அது யாருடைய கூட்டு சதி?

வீரமணி,போயஸ் தோட்டத்திற்கு தோப்புகரணம் போட்டதால், திக வை விட்டு வெளியேறியவர்களும்,வெளியேற்றப்பட்டவர்களும் துரோகிகள் என்றால் பார்ப்பன கூட்டு வைத்தது யார்? என்பதை தமிழ்நாடே அறியும்.

தமிழ்நாடரசின் டான்சி நிலத்தை தனக்காக வாங்கிய ஜெயலலிதா, நூல் வெளியீட்டு விழாவில் புத்தகத்தை வாங்கி கொண்டு பணம் கொடுத்ததற்காக, பாப்பாத்தியிடம் பெரியாரை பார்க்கிறேன் என்று சடகோபம் சாத்தி,பாப்பாத்தி ஜெ. க்கு ஆலவட்டம் வீசியது யார்?

வீரப்பன் காட்டில் பெய்த மழையில் நனைந்தவர்கள் கனவுலகில் இப்போது ஆட்டம் போடுகின்றனர்களாம்.......
பெரியாரியல் கொழுப்பும், கருப்புச்சட்டைக்காரன் என்ற திமிரும் ஆட்டம் போட தான் வைக்கும்.

மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை.
கல்லூரியா? நிகர்நிலையா? எதுவும் கிடையாது.
அப்புறமென்ன...ஆட்டம் தான்!

மேல்மருவத்தூர் வரை வந்த சிபிஅய், வல்லத்திற்கு வராதிருக்க எத்தனை சிங்கி? எத்தனை ஜால்ரா?

செவ்வாடையை பற்றிய சிபிஅய், கருப்பா(ட்)டை விட்டது எப்படி?

வீரமணி, இவ்வளவு சரியாக சொல்வதை பார்க்கும் போது மழையில் நனைந்தவர்களுக்கு, இவரா வந்து குடை பிடித்தார்? என்ற சந்தேகம்

சே, இருக்காது.
நனைகிறவர்கள் முதலமைச்சராக இருந்தால் தான்...குடையும் பிடிப்பார்; கூஜாவும்தூக்குவார் என்பது 'நிகர்நிலை' அறிந்த உண்மை.

எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும், நமது முன்னாள் "ஆசிரியருக்கு" அன்பான வேண்டுகோள் ஒன்றும் நம்மிடம் இருக்கிறது.

கழகம்,டிரஸ்ட்,கல்லூரி எல்லாம் MNC மாதிரி தான்! CEO வா ஆக்ட் பண்ணி சக்சஸ் பண்ணலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்
நம்ம அன்பு raj தம்பி;

நீங்களோ, தற்கொலைப் பட்டாளங்கள் என்பதை மீண்டும் நிரூபிக்க களங்களைச் சந்திக்க கடமை வீரர்களின் பட்டாளங்கள் காத்திருக்கின்றன என்றெல்லாம் எழுதி பீதிய கெளப்பினா, பொத்தி,பொத்தி செல்லமா வளர்த்த பிள்ளை மிரண்டுட போகுது.

பார்த்து, பக்குவமா....உங்க திறமை எல்லாம் Knowledge Transfer session -அய் Contact பண்ணி சொல்லி கொடுங்க.


9 வயதில், அரை டிராயர் போட்ட காலத்திலிருந்து, தந்தை பெரியார்,தந்தை பெரியார் என்றே சுற்றி திரிந்ததற்கு இது தான் மிச்சம்.

பெரியார், இந்தி படிக்கவிட்டிருந்தால்...புடுங்கி தள்ளியிருப்போம் !





பக்தி,மதம் என்ற போர்வையில்...பார்ப்பன ஆதிக்கத்தில் சிக்கியிருந்த தமிழினத்தை மீட்டெடுத்தது, இன்னும் மீட்டெடுக்க போராடிக்கொண்டிருப்பது திராவிட இயக்கம்!
பார்ப்பன அடிமையாய் சொரணையற்று கிடந்தவனுக்கு, அவனது சாதீய அவமானத்தை உணர்த்திக் காட்டி....தமிழனாக அடையாளம் காட்டியதும் திராவிட இயக்கமே!!

தமிழினத்தை பார்ப்பன ஆதிக்கத்திலிருந்து மீட்டெடுக்க...சமூக மருத்துவரான பெரியாரின் சிகிச்சை முறையே கடவுள் மறுப்பு; நாத்திகம்.


இவற்றையெல்லாம் மறந்த- நன்றி கெட்ட தமிழன், பக்தி போதையினாலும் இந்திய தேசிய மயக்கத்திலும் மீண்டும் பார்ப்பன அடிமையாய் மாறி கொண்டிருக்கிறான்.

தமிழர்களின் அரசியலை ஆக்ரமித்த இந்திய தேசியம், தமிழினத்தை மொழி ரீதியாக ஒடுக்கி,மொழியடையாளத்தை முற்றாக ஒழிக்க செய்வதற்கான ஆயத்தமே "இந்தி திணிப்பு".

1938 -ல் தமிழ்நாட்டு பார்ப்பன கங்காணியாக ராஜாஜியை முன்னிறுத்தி தமிழ்நாட்டிற்குள் நுழைந்த இந்தியை..... ஊர்தோறும் இந்தி எதிர்ப்பு படையை உருவாக்கி போர் முழக்கம் செய்தவர் பெரியார்.

1938 - போராட்டமே, வரலாற்றில் தமிழன் தொடுத்த முதல் போர்.

பெரியார் அதை ஒரு அரசியல் போராட்டமாக நடத்தாமல், தமிழ்நாட்டு மண்ணில் இந்தி எதிர்ப்புணர்ச்சி விருட்சமாக வளர விதையாக நின்றார்.

அன்று, பெரியார் இட்ட அடித்தளம் தான் தமிழ் மண் தலை நிமிர்விற்கும், வடவர் ஆதிக்கத்திற்கு தலைவணங்கா தன்மைக்கும் காரணியாக அமைந்துள்ளது.

இன அடையாளத்தை தொலைத்து, பார்ப்பனதாசனாய் இருப்பதை பெருமையாக நினைக்கும் சோரம்போன தமிழனின் புலம்பல்களில் ஒன்று தான், திராவிட இயக்கம், இந்தி படிக்க விடாமல் தடுத்து விட்டது என்பது;

பெரியார் இந்தி படிக்க விடாமல் தடுத்துவிட்டால் தான் குடி முழ்கி போய்விட்டது. இந்தி படித்திருந்தால் புடுங்கிதள்ளியிருப்போம் என்பது தான் இந்த மண்டைவீங்கிகளின் வாதம்.

இந்த அரைவேக்காடு மடையர்கள், தங்கள் புலம்பலை நியாயப்படுத்த கையில் துக்ளகோடு தான் பேசுவார்கள்.

படிப்பறிவிலும் சமூக ரீதியிலும் மிகவும் பிற்பட்ட பீகார், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒரிஸ்ஸா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய எட்டு மாநிலங்களில் மட்டும் 42.1 கோடி மிகக் கொடுமையான வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர்.

இந்த எண்ணிக்கை உலகின் மிக ஏழ்மையான கண்டமான ஆப்பிரிக்காவில் உள்ள மிக மிக ஏழ்மையான 26 நாடுகளில் வசிக்கும் மிக ஏழ்மையான மக்களின் ஒட்டுமொத்த கூட்டுத் தொகையை விட அதிகமாகும். இந்த நாடுகளில் மிகக் கடுமையான ஏழ்மையில் உள்ளோர் எண்ணிக்கை 41 கோடியாகும்.


இந்த உண்மை நிலையினை சொல்வது - ஐ.நா. சபையின் மனிதவள மேம்பாட்டுத்துறையும் ஆக்ஸ்போர்ட் மனிதவளத்துறையும் இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையிலே மேற்கண்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.


இதன் மூலம் ஆப்பிரிக்க நாடுகளை விட இந்தியாவில் தான் வறுமை அதிகமாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியப் பெண்களில் பாதிபேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

கல்வி தொடங்கி...கக்கூஸ் வரைக்கும் கடவுளை கண்டுபிடித்து வைத்திருக்கும் பாரத புண்ணிய பூமியின் நிலை இது தான்!

உள்ளங்கையிலிருந்தே, தங்ககாசுகளாககொட்டும் லெட்சுமி கண்டுபிடித்த நாட்டில் 42.1 கோடி பேர் சோத்துக்கு வழியில்லாமல் சிங்கியடிக்கிறார்கள்.

இதை "புண்ணியபூமி" என்று புளுகி திரியும் ராமகோபாலய்யருக்கு மானமிருந்தால் நாக்கை புடுங்கி கொண்டு சாகலாம்.
அது "அவாளுக்கே" கிடையாது ; எதிர்பார்க்கவும் முடியாது.


வறுமை கோரத் தாண்டவமாடும் பீகார், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒரிஸ்ஸா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் இந்தி பேசும் மாநிலங்களே. மேற்கு வங்கம் தவிர மற்ற மாநில மக்களின் தாய்மொழியே பாழாய் போன இந்தி தான்.

துக்ளக் படித்து அறிவுசீவியான தமிழர்களே, இந்தியை தாய்மொழியாக கொண்ட வட மாநிலத்தை ஒப்பிடுகையில் இந்தி சனியனை அடித்து விரட்டிய
தமிழ்நாடே மேல் அல்லவா?

இனி மேலும் சொல்வீர்களா ? பெரியார், இந்தி படிக்கவிட்டிருந்தால்...புடுங்கி தள்ளியிருப்போம் ! என்று.........

பெரியாரின் இஸ்லாத் பற்றிய பார்வையும், அப்துல்லாவின் வழுக்கல்வாதமும்......

கடந்த ஜீன் 19 ந் தேதி மாலையில் "மனதை இயக்கு; வாழ்வை உயர்த்து " என்ற தலைப்பில் கருத்தரங்கம் லண்டன் ஈஸ்ட் ஹேம் - பிளாச்ட் பள்ளியில் நடைபெற்றது.
கருத்தரங்கின் சிறப்பு விருந்தினராக ஜனாப். அப்துல்லாஹ் அவர்கள் கலந்துகொண்டு தலைமையுரையாற்றினார்.

தமிழ் உணர்வாளரும், லண்டன் சென்னை தோசா குழுமத்தின் உரிமையாளருமான திரு.அசோகன் அவர்கள் முன்னிலை வகுத்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இஸ்லாமிய சார்பான இந்நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில், சிறப்பு விருந்தினராக பேரா.பெரியார்தாசன் என்றும், அடைப்புக்குறிக்குள் டாக்டர். அப்துல்லாஹ் என்றும் விளம்பரபடுத்தப்பட்டிருந்தது.

கருத்தரங்கில் சிறப்புரையாற்றிய..... ஜனாப். அப்துல்லாஹ், குழந்தை வளர்ப்பு மற்றும் குழந்தைகளின் உளவியல் குறித்து விரிவாக பேசி, இடையில் இஸ்லாம் கருத்துகளையும் வலியுறுத்தியே பேசினார்.

மொத்தத்தில், மூடி மறைக்கப்பட்ட மத பிரச்சாரத்தையே செய்து முடித்தார்.

கேள்வி நேரத்தில்உளவியல் கேள்விகளுக்கு பிறகு நாத்திகரான நீங்கள், இஸ்லாமியரானதற்கான " உண்மை நிலை" என்ன? என்று கேள்வி அனுப்பபட்டது.

கேள்வியின் சூட்சமத்தை புரிந்து கொண்ட அப்துல்லா, நான் பணத்திற்க்காக முஸ்லீமாக மாறவில்லை என்று நேரடியாகவே பதில் தந்தார்.

சைவ மதத்திலிருந்து இஸ்லாமிற்கு மாறியது ஏன்? என்ற வினாவிற்கு, சைவத்திலிருந்து, நாத்திகத்திற்கு மாறி பின்பு தான் இஸ்லாத்திற்கு மாறியதாக "பொருள்" பொதிந்த பதிலை தந்தார்.

அதனை தொடர்ந்து, பெரியார் தி.க தோழர் ஒருவர்...மதப் பிரச்சார நிகழ்ச்சிக்கு, பெரியார்தாசன் பேசுகிறார் என்று விளம்பரபடுத்தியிருப்பது எவ்விதத்தில் சரி? இது உண்மையான பெரியார் தொண்டர்களை அவமதிப்பது போல் உள்ளது எனக் கேட்டார்.

அப்துல்லா, தான் இஸ்லாதிற்கு மாறியவுடனே, தொலைக்காட்சி நேர்காணலிலும், ஹிந்து பேட்டியிலும், தன்னை பெரியார்தாசன் என்று குறிப்பிடவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்ததாகவும், இந்நிகழ்ச்சி அழைப்பாளர்கள் தவறுதலாக, பெரியார்தாசன் என்று குறிப்பிட்டுவிட்டார்கள், அது குறித்து அவர்களிடம் பேசுவதாகவும் கூறினார்.

தொடர்ந்து, நாத்திகராக இருக்கும் போதே, ராஜராஜன் என்ற நபருடன் பெயரியல் தொடர்பான தொ.கா நிகழ்ச்சியிலும், இராசிகல் விளம்பரத்திலும் ந்டித்தீர்களே? என்று அந்த தோழர் கேள்வியெழுப்ப....

தன் எழுப்பிய பகுத்தறிவு கேள்விகளை கட் செய்துவிட்டு....அவர்(ராஜராஜன்) பேசுவதை தான் கேட்டு கொண்டிருப்பதை போல எடிட் செய்துவிட்டார்கள் என்றும், இராசிகல் விளம்பரத்தில் விளம்பரத்தில் நடித்திருந்தால், இந்து முன்னணி ராமகோபாலனுடன் தன்னால் தொலைக்காட்சியில் விவாதம் செய்திருக்கமுடியாது என்றார் அப்துல்லா.


மேலும்,தனது தனிப்பட்ட விருப்பத்தின் பேரில், இஸ்லாத்திற்கு மாறியதாகவும், ஆனால் பெரியாரிய அடிப்படை கொளகைகளில் தான் உறுதியாக இருப்பதாகவும் கூறினார்.

அதனை தொடர்ந்து, இழிவு ஒழிய இஸ்லாம் தான் சிறந்த மார்க்கம் என்று அய்யாவே கூறியுள்ளார். அய்யா 27 முறை மீலாது நபி விழாககளில் கலந்துக் கொண்டு உரையாற்றியுள்ளார் என் அப்துல்லா பேச...
அய்யா, ஜாதி சங்க மாநாடுகளிலும் கலந்து கொண்டிருக்கிறார், அதற்காக அய்யா, ஜாதிகளையும் ஜாதி சங்கங்களையும் ஆதரித்தார் என சொல்ல முடியுமா? என நமது தோழர் விவாதத்தை தொடர.....

அப்துல்லாவோ, நீங்கள் கேட்ட கேள்விக்கு என்னை பதில் சொல்ல விடுங்கள் என்று கூறி, இது நாம் மட்டும் தனியாக பேச வேண்டிய விஷயம்; மற்றவர்களுக்கு தேவையற்ற விஷயம் என்று முடித்துக் கொண்டார்.

மேடையிலிருந்து இறங்கி வந்த சிறிது நேரத்திற்குள்ளே, பாய் ஒருவர், தொழுகைக்கு நேரமாச்சு, பள்ளிக்கு கிளம்புங்க என்று நினைவூட்ட...பூனையாய் பின் தொடர்ந்தார்.


எப்படி இருந்த பெரியார்தாசன் இப்படி அப்துல்லா வாக மாறியது பெரிய காமெடிதான்.

அவரது பேச்சைக் கேட்டு சிரித்த நமக்கு, அவரது செயற்பாடுகளாலே சிரிப்பு மூட்டுகிறார்.

எத்தனை வேதாசலங்கள் ஏறினாலும், எத்தனை அப்துல்லாக்கள் இறங்கினாலும் பெரியார் எக்ஸ்பிரஸை நிறுத்திவிட முடியாது; தொடர்ந்து ஓடிக் கொண்டுத் தான் இருக்கும்.


பின்குறிப்பு :

இதோ, இஸ்லாம் குறித்து பெரியாரே பேசுகிறார்.......

ஆதிதிராவிடர்களை நான் ‘இஸ்லாம் கொள்கையைத் தழுவுங்கள்’ என்று சொன்னதற்காக அநேகம் பேர் என் மீது கோபித்துக் கொண்டார்கள். அவர்களைப் பற்றி நான் கோபித்துக் கொள்ளவில்லை. அவர்களுக்குச் சொந்த அறிவுமில்லை, சொல்வதையும் கிரகிக்க சக்தியுமில்லை. சிலருக்குத் தங்கள் மேன்மை போய்விடுமே, தங்களுக்கு அடிமைகள் இல்லாமல் போய்விடுமே என்கின்ற சுயநல எண்ணம் என்றே நான் கருதிவிட்டேன். ஏனெனில் ‘மோட்சம் அடைவதற்காக’ வென்று நான் ஆதிதிராவிடர்களை இஸ்லாம் கொள்கைகளைத் தழுவுங்கள் என்று சொல்லவில்லை, அல்லது ‘ஆத்மார்த்தத்திற்கோ’ ‘கடவுளை அறிவதற்கோ’ நான் அப்படிச் சொல்ல வில்லை. ஆதி திராவிடர்களின் தீண்டாமையைப் போக்குவதற்கு சட்டம் செய்வது, சத்தியாக்கிரஹம் செய்வது முதலியவை போலவே இஸ்லாம் கொள்கையைத் தழுவுவது என்பதும் ஒரு வழி என்றே சொன்னேன். இனியும் சொல்லுகின்றேன்.

சட்டம் செய்வது கஷ்டம். செய்தாலும் அமுலில் வருவதும் கஷ்டம். சத்தியாக்கிரஹம் செய்வதும் கஷ்டம். செய்தாலும் வெற்றி பெறுவதும் சந்தே கம். இவற்றால் துன்பமும், தோல்வியும் கிடைத்தாலும் கிடைக்கலாம். ஆனால் ஆதிதிராவிடர்களுக்கு இஸ்லாம்கொள்கையை ஏற்றுக் கொண் டேன் என்று சொல்வதில் என்ன கஷ்டம்? அதில் தோல்வியோ துன்பமோ ஏதாவது உண்டா? அல்லது அன்னியருக்கு ஏதாவது கஷ்டம் உண்டா? அவன் ஆஸ்தீகனாய் இருந்தால் என்ன? நாஸ்தீகனாய் இருந்தால் என்ன? உண்மை இஸ்லாம் ஆனால் என்ன? பொய் இஸ்லாம் ஆனாலென்ன? யாருக்கும் எவ்வித கஷ்டமும் இல்லாமல், வேண்டுமானால் எந்தவித மன மாறுதல் கூட இல்லாமல் தன்னுடைய இழிவையும் கஷ்டத்தையும் விலக்கிக் கொள்ள ஆசையும் அவசரமும்பட்ட ஒரு மனிதன்தான் மாலை 5-00 மணிக்கு இஸ்லாம் கொள்கையை ஏற்றுக் கொண்டதாய்ச் சொல்லி 5-30மணிக்கு ‘தீண்டாதவன்’ என்கின்ற இழிவிலிருந்து மீண்டு தெருவில் நடக்க உரிமை பெற்று மனிதனாவதில் ஏன் மற்றவர்கள் ஆnக்ஷபிக்க வேண்டும்? என்பது எனக்கு விளங்கவில்லை. கேவலம் வயிற்றுச் சோற்றுக் காக 100க்கு 90 மக்கள் என்னென்னமோ அவரவர்களாலேயே இழிவான குற்றமான காரியம் என்று சொல்லப்படுவதை எல்லாம் செய்கின்றார்கள். அப்படி இருக்க இதில் என்ன இழிவோ குற்றமோ இருக்கின்றது என்று கேட்கின்றேன். உலகில் மதங்கள் அடியோடு ஒழிக்கப்படும் போது இஸ்லாம் மதமும் ஒழியும். அதுபோது இந்த ஆதிதிராவிடர்கள் ஏற்றுக் கொண்டதும் ஒழிந்துபோகுமே தவிர அது மாத்திரம் நிலைத்து விடாது. அதற்காக அதிகக் கஷ்டமும் இல்லை. ஆகையால் எது எப்படியானாலும் தீண்டாமை ஒழிய வேண்டுமென்றால் தீண்டாதார் எனப்படுபவர்கள் இஸ்லாம் கொள்கையைத் தழுவ வேண்டியது என்பது ஒரு வழியேயாகும்.


குறிப்பு: 28.07.1931 ஆம் நாள் சாத்தான்குளத்தில் ( திருநெல்வேலி மாவட்டம் ) நடைபெற்ற முகமதுநபி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தலைமையேற்று ஆற்றிய உரை.

குடி அரசு - சொற்பொழிவு - 02.08.1931


முழு சொற்பொழிவையும் படிக்க : -
http://periyardk.org/PHP/Details.php?key1=Kudiyarasu&key2=1931&fileName=Aug&cCount=1

தந்தை பெரியார், தீண்டாமை கொடுமையினால் துயருறும் மக்களுக்குத் தான் இஸ்லாத்தை பரிந்துரைத்தாரே தவிர, மதங்களை மறுத்து,சாதிகளை ஒதுக்கி, பகுத்தறிவு பேசும் நாத்திகர்களுக்கு, சுயமரியாதைகாரர்களுக்கு,பெண்ணுரிமை பேசுபவர்களுக்கு அல்ல ! என்பது டாக்டர்.அப்துல்லா நன்கறிவார்.

சாமியும் இல்லை;சாதியும் இல்லை என்பது தான் பெரியார் தி.க ! -கொளத்தூர் மணி உரை

சாமி இல்லை என்பது தி.க!


சாமியும் இல்லை;சாதியும் இல்லை என்பது தான் பெரியார் தி.க!!


1924 -ல் பார்ப்பன வீட்டு திண்ணையில் தூங்கிய காந்திக்கு, 1927-ல் பார்ப்பான் வீட்டுக்குள் அனுமதி வாங்கி தந்தது சுயமரியாதை இயக்கமே!


பெரியார் திராவிடர் கழகத்தின் சாதி ஒழிப்பு சுற்றுபயண பிரச்சாரத்தில்,ஜீன் 22 அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர். தோழர்.கொளத்தூர் மணி அவர்கள் ஆற்றிய உரை.



கொளத்தூர் மணி உரை கேட்க இங்கே அழுத்தவும்

பெரியாரின் குடிஅரசு க்கு விடுதலை - சன் நியூஸ்

video




பெரியாரின் குடிஅரசு க்கு விடுதலை - சன் நியூஸ்

கடலூர்.வீரமணியின் சண்டித்தனத்திற்கு முற்றுப் புள்ளி.










மண்ணாங்கட்டியால் தடுக்க முடியாத பெருவெள்ளம் -பெரியார்!





வைக்கோல் கட்டுகளால் அணைத்துவிட முடியாத பெருநெருப்பு- பெரியார்!!



































பெரியாரும்,பெரியாரின் கொள்கைகளும்,பெரியாரியக்கமும், இன்றும் நடைபோடுவது தங்களது முகத்தையும்,பெயரையும் விளம்பரவெளிச்சத்திற்கு கொண்டுவராத,கொண்டுவர விரும்பாத பெரியார் மாணவர்களால் மட்டுமே.





பெரியாரியலை எதிரிகள் ஏகடியம் பேசவும், நம்மவர்களே, பெரியார் காலத்தில எல்லாம் சரிதாங்க, இந்த காலத்திற்கு எல்லாம் சரிப் பட்டு வராது என்று சறுக்கல்வாதம் பேசவும் யார் காரணம்?





நாளுக்கு நாள் வளர்ச்சி பெற வேண்டிய பெரியாரியக்கம் தளர்ச்சி கொள்ள யார் காரணம்?





பெரியாரின் வாரிசுகளாக, சீடர்களாக தங்களை தாங்களே- விளம்பரபடுத்தி தன் வாழ்விற்கு மட்டுமல்லாது, தங்கள் பரம்பரைக்கே வெளிச்சம் தேடிக்கொண்டிருக்கும் போலி பெரியாரிஸ்ட்களாலே!





பகுத்தறிவை பயன்படுத்தாத பக்தர்களே,போலிசாமியார்களை ஒரு கட்டத்தில் அடையாளம் கண்டு கொள்கிறார்கள்.





பெரியார் எழுத்துக்களை வெளியிடுவதற்கு குறுக்கே நின்ற பின்பும், போலி பெரியாரிஸ்ட் டை அடையாளம் காண கருப்பு சட்டைகாரர்களுக்கு பெரியார் தந்த புத்தி கூட தேவையில்லை. அடிப்படையான சொந்த புத்தியே போதும்.





இனி, பெரியார் தொண்டர்களுக்கு பெரியாரியியலை பரப்புவதை விட முக்கிய வேலை போலி பெரியாரிஸ்ட்களை அடையாளப்படுத்துவதே.





போலி பெரியாரிஸ்ட்களை அடையாளப்படுத்தும் கருஞ்சட்டைகளின் பணியை, கருப்பு உடையணிந்து மாண்பமை நீதியரசர்கள் இப்ராகிம் கலிஃபுல்லா, கிருபாகரன் ஆகியோரே தொடங்கி வைத்துள்ளனர்.





தந்தை பெரியாரின் குடிஅரசு நூல்களை, பெரியார் திக வெளியிடுவதற்கான தடையை 09/06/2010 அன்று வெளியிட்ட தீர்ப்பின் வழி சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் தகர்த்தெரிந்துள்ளனர்.











பெரியார் வென்றிருக்கிறார்!








பெரியாரின் தொண்டர்கள் வென்றிருக்கிறார்கள்!!









பொதுநலபெரியாரை பூட்டிவைக்க நினைத்த சுயநலவாதிகளின் முகமூடி கிழிக்கபட்டிருக்கிறது.








"அதிகாரபூர்வம்" பேசிய அல்பங்களுக்கு ஆப்பு செருகப்பட்டுள்ளது.









உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பிற்கு பிறகாவது,தமிழக அரசு- பெரியார் நூல்களை நாட்டுமையாக்குமா? அல்லது அல்லக்கைகளின் "ஜால்ரா" சத்தத்திற்காக அப்படியே விட்டுவிடுமா? என்பது தெரியவில்லை.






ஆனால், பெரியாரை மக்கள் உடைமையாக்கி, பெரியார் நூல்களை நாட்டுடைமையாக்குவதே போலி பெரியாரிஸ்ட் டுக்கு தரும் தண்டனையாக இருக்கும்.



தொடர்புபட்ட இணைப்பு :http://erottukannadi.blogspot.com/2008/08/1935-1952-intellectual-properties.html

ஹிந்துவ தாத்பரிய "பெருமையை" விளக்கி பெரியார் தி.க நடத்தும் பட்டிமன்றம்!



தாருகாவனத்து ரிஷிபத்தினிகளை கற்பழித்த காமுகன் சிவன்,



கோபிகாஸ்த்ரிகளுடன் சரச லீலை புரிந்த காமந்தகன் கிருஷ்ணனின்





ஹிந்துவ தாத்பரியங்களை கலியூகத்திலும் நிகழ்த்தி காட்டிய



.... காஞ்சி தேவநாதன் & நித்தியானந்தன் ஆகியோரின் செயல் திறனை விளக்கி





சென்னை, கே.கே.சாலை எம்.ஜி.ஆர்.நகரில் வரும் சனிக்கிழமை (13.03.10) அன்று பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாட்டில் பரபரப்பான பட்டிமன்றம் நடக்க உள்ளது.










பட்டிமன்றதின் தலைப்பு - ஒழுக்ககேட்டிலும் மோசடியிலும் விஞ்சியிறுப்பதது காஞ்சி தேவநாதனா? நித்தியானந்தனா ?





தலைமை : மு.வெங்கடேசன் பகுதி செயலாளர் பெ.தி.க





முன்னிலை : செ.செயசீலன் பகுதி தலைவர் பெ.தி.க





வரவேற்புரை : சு.துரைராசு பகுதி பொருளாளர் பெ.தி.க





நடுவர் : ஆனூர் செகதீசன் துணை தலைவர் பெ.தி.க





நன்றியுறை : கரு.அண்ணாமலை பெ.தி.க





காஞ்சி மக்கள் மன்றத்தின் பறை முழக்கம் நடைபெறும்.

புலிகள் ஊரில் நடந்த மாவீரர் தினம்!

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளான நவம்பர் 26, போரில் உயிரிழந்த புலிகளுக்கு வீரவணக்கம் செய்யும் நாளான நவம்பர் 27 மாவீரர் தினம் ஆகியவற்றை உலகம் முழுவதும் உள்ள தமிழீழ ஆதரவாளர்கள் ஆண்டுதோறும் சிறப்பாகக் கடைப்பிடிப்பது வழக்கம்.






இந்த ஆண்டு பிரபாகரனும்,புலிகளும் அடியோடு அழித்தொழிக்கப்-பட்டதாகக் கருதப்படும் நிலையில்,தமிழகம் முழுவதும் ஈழ ஆதரவாளர்களால் இந்த இரு தினங்களும் சிறப்பாகவே கடைப்பிடிக்கப்பட்டன.







கடந்த 26-ம்தேதி ஈரோடு, திருச்சி போன்ற இடங்களில் பிரபாகரனின் பிறந்த நாளுக்காக ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களைக் கிழித்தும், டிஜிட்டல் பேனர்களைச் சேதப்படுத்தியும் தங்களுடைய எதிர்ப்பை காங்கிரஸார் பதிவு செய்தனர். சேலம் போன்ற இடங்களில் காங்கிரஸாருக்கு இந்த சிரமத்தைத் தராமல் போலீஸாரே அந்த கிழிப்பு, உடைப்பு பணிகளைப் பார்த்துக் கொண்டனர்.



ஆனால், சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் எந்த இடையூறுமின்றி வெகு சிறப்பாக பிரபாகரனின் பிறந்தநாளைக் கொண்டாடி மாவீரர் நாளை அஞ்சலி தினமாக கடைப்பிடித்து அசத்தியிருக்கிறது பெரியார் திராவிடர் கழகம்.





கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பாக கொளத்தூர் பகுதியில் கும்பாரப்பட்டி என்ற சிறு கிராமத்தில் விடுதலைப்புலிகள் தங்கியிருந்து அங்கே ஆயுதப் பயிற்சி மேற்கொண்டனர். அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் ஆதரவுடன் இந்தப் போர்ப் பயிற்சி 84-ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கி நவம்பர் 86-ம் ஆண்டு வரை நடந்தது.





புலிகள் தங்கி போர்ப்பயிற்சி எடுத்ததால், அந்தக் கிராமத்தவர்கள் தங்கள் கிராமப் பெயரை புலியூர் என்று மாற்றிக் கொண்டுள்ளனர். இந்த ஆண்டு புலியூர் எனப்படும் கும்பாரப்பட்டியில் மாவீரர் தின நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற இருப்பதைக் கேள்விப்பட்டு நாமும் புலியூருக்கு விரைந்தோம்.





கொளத்தூரிலிருந்து சின்னதண்டா செல்லும் வழியில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது புலியூர்.

27-ம்தேதி நாம் அங்கு சென்றபோது கிராமமே புதுப்பொலிவுடன் காணப்பட்டது. எங்கு பார்த்தாலும் புலிகளின் இயக்க நிறங்களான மஞ்சள், சிவப்பு வண்ணங்களில் காகிதத் தோரணங்கள், கொடிகள்.





ஊர் பேருந்து நிலையத்தில், புலிகளால் கட்டித் தரப்பட்ட பயணிகள் நிழற்கூடம் ஒன்று காட்சியளித்தது.



ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட சமயத்தில் கொந்தளித்த கொளத்தூர் காங்கிஸார், புலிகள் மீது கோபம் கொண்டு அந்த நிழற்கூடத்தை அப்போது அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். அதன்பிறகு அந்த நிழற்கூடத்தைச் செப்பனிட்டு, புலிகளின் தளபதியாக அங்கு தங்கியிருந்த பொன்னம்மானின் பெயரை அதற்குச் சூட்டியிருக்கிறார்கள் மக்கள்.



புது வண்ணம் பூசப்பட்டிருந்த அந்த நிழற்கூடத்தின் முன்னால்தான் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி ஏற்பாடாகியிருந்தது. நிழற்கூடத்துக்கு நேர் எதிரே புலிகள் பயிற்சி பெற்ற இடத்துக்குச் செல்லும் பிரிவுச் சாலையின் தொடக்கம் `புலியூர் பிரிவு' என்ற பெயர் சூட்டப்பட்டு, அதற்கான பெயர்ப்பலகை திறக்கப்பட தயாராக இருந்தது.





கறுப்பு உடையணிந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அங்கு கூட்டம் கூட்டமாக தனி வாகனங்களில் வரத்தொடங்கினர். சுமார் நானூறுக்கும் அதிகமானோர் வந்து குவிந்தனர்.



பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி புதுச்சேரியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றுவிட்டதால், அவருடைய சகோதரர் பழனிசாமி இந்த ஆண்டு நிகழ்ச்சியை முன்னின்று நடத்தினார். புலிகள் பயிற்சி பெற்ற காலத்தில் அவர்களுக்கு உதவிய முத்துசாமி என்பவர் புலியூர் பிரிவு பெயர்ப் பலகையைத் திறந்து வைத்தார்.





அதன்பின் தமிழீழ மாவீரர்நாள் பேனருக்கு முன்பு பெரியார் திராவிடர் கழக இளைஞர்கள் இருவர் மெழுகுவர்த்தி ஏற்றி வீரவணக்க நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து நீண்ட வரிசையில் நின்று ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி அமைதியாகக் கலைந்து சென்றனர்.



அங்கு ஒரு போலீஸ்காரர் கூட நம் கண்ணில் தட்டுப்படவில்லை. துளி அசம்பாவிதமோ, இடையூறோ இன்றி திட்டமிட்டபடி நிகழ்ச்சி நடந்து முடிந்தது.





முத்துசாமியிடம் பேசியபோது பல சுவையான தகவல்களைத் தந்தார் அவர்.



``புலிகள் இங்கே மூன்றாண்டு காலம் போர்ப் பயிற்சி மேற்கொண்ட காலத்தில் அவர்கள் பேசிய தூய தமிழால் கவரப்பட்டு இன்றும் எங்கள் ஊரைச் சேர்ந்த பலர் தூய தமிழில் பேசி வருகிறார்கள்.



புலிகள் இயக்க இளைஞர்கள் எங்களிடம் மிகுந்த மரியாதை உள்ளவர்களாக நடந்து கொண்டனர். புலிகளின் மருத்துவ முகாமே எங்கள் ஊர் மக்களுக்கான மருத்துவ முகாமாகவும் பயன்பட்டது. அவர்கள் பயன்படுத்திய ஜீப்பே எங்கள் மக்களின் போக்குவரத்து வாகனமாக உதவியது. நெருங்கிய உறவினர்களைப் போல எங்கள் நெஞ்சத்தில் பசங்கள் (புலிகளை இங்குள்ளவர்கள் இப்படித்தான் குறிப்பிடுகிறார்கள்) ஒட்டிக்கொண்டார்கள். புலிகள் இருந்த காலத்தில் திருட்டுப் பயமே இருக்கவில்லை.





மொத்தம் மூன்று குழுக்களாக அவர்கள் பயிற்சி எடுத்தார்கள். முதல் குழுவுக்குத் தலைமையேற்றுப் பயிற்சி தந்தவர் பொன்னம்மான். அவருடன் வந்திருந்த புலேந்திரன் ஈழப் போரில் உயிர் நீத்ததைக் கேள்விப்பட்டு எங்களது நெருங்கிய உறவினரை இழந்தது போல கதறியழுதோம்.





பொன்னம்மான் சாதாரணமாக தரையில்தான் பசங்களோடு பசங்களாகப் படுத்துறங்குவார். மூன்று முறை இந்தப் பயிற்சியை மேற்பார்வையிட வந்திருந்த புலிகள் தலைவர் தம்பி பிரபாகரனும்கூட தரையில்தான் படுத்துறங்கினார்.



அவர்கள் எங்கள் தலைவர் கொளத்தூர் மணியை `அண்ணன்' என்றே பாசத்துடன் அழைத்து வந்தனர்.

பயிற்சி முடித்து தாயகம் திரும்பிய அவர்களை கலங்கிய கண்கள், கனத்த இதயத்துடன் வழியனுப்பிவைத்தோம்'' என்ற முத்துசாமி, புலிகள் தங்கியிருந்து பயிற்சியெடுத்த வனப்பகுதிக்கு நம்மை அழைத்துச் சென்று காட்டினார். தற்போது வனத்துறை வசமிருக்கும் அந்தப் பகுதியில் புலிகள் கட்டியிருந்த ஒரு தண்ணீர்த் தொட்டியும், இரண்டு சிறு காவல்சுவர்களுமே அவர்களது நினைவைச் சொல்ல மிச்சமிருந்தன.





புலியூரில், மாவீரர் தின வீரவணக்க நிகழ்ச்சி நடந்த அதே நாளில் புதுச்சேரி அரியாங்குப்பத்தில் `கரும்புலி மில்லர் நினைவரங்கம்' என்ற சிறிய ஹால் ஒன்றை கொளத்தூர் மணி, விடுதலை ராஜேந்திரன், ராமகிருஷ்ணன் மற்றும் பா.ம.க. எம்.எல்.ஏ. வேல்முருகன் ஆகியோர் திறந்து வைத்திருக்கிறார்கள்.





அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுத் திரும்பிய கொளத்தூர் மணியிடம் பேசினோம். "புலியூர் பகுதி புலிகளின் வீரவரலாற்றில் இடம்பிடித்த ஒரு முக்கிய பகுதி. இங்கு 34 மாதங்களில் ஏறத்தாழ 2000 புலிகள் பயிற்சி பெற்ற போதிலும் ஒருதுளி அசம்பாவிதமும் ஏற்பட்டதில்லை'' என்றார் கொளத்தூர் மணி.





நாம் அங்கிருந்து திரும்பும்போது மேட்டூர் மற்றும் கொளத்தூர் பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த பிரபாகரன் பிறந்தநாள், மாவீரர் நினைவு தின போஸ்டர்கள், கட்டப்பட்டிருந்த பேனர்களை அகற்றச் சொல்லி பெரியார் திராவிடர் இயக்கத்துப் பிரமுகர்களிடம் போலீஸார் தூதுவிட்டுக் கொண்டிருந்தனர்.



ஆனால் கடைசிவரை பெரியார் தி.க.வினர் அதற்கு அசைந்து கொடுக்கவேயில்லை.





படங்கள்: ஏ.ஏ.ராஜ்



- வை. கதிரவன்





நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர்






கொளத்தூர்-புலியூர்- மாவீரர் தின நிழற்படங்கள்



மாவீரர்நாள் வீரவணக்க நிகழ்வு கொளத்தூர் @ Yahoo! Video




















பொன்னம்மான் நிழற்குடை

மாவீரர் விளக்கேற்றும் குழந்தைகள்,அருகில் தோழர்.மார்ட்டின்,தோழர்.தா.செ.பழனிசாமி

மாவீரர் விளக்கேற்றும் மகளிர்

அந்திகருக்கலில் மாவீரர்களுக்கு அஞ்சலி -1
அந்திகருக்கலில் மாவீரர்களுக்கு அஞ்சலி -

தீபமேற்றும் கொளத்தூர் "பிரபாகரன்" கள்.

மக்கள் திரள்

நம்பிக்கை சுடர்கள்
சமாதான புறா பெயரில் நகரம்.

புதுவை-அரியாங்குப்பம் மில்லர் விளையாட்டரங்க திறப்பு விழா -நிழற்படங்கள்.



புதுவை-அரியாங்குப்பம் மில்லர் விளையாட்டரங்கினை திறந்துவைக்கும் தோழர்.கொளத்தூர்.மணி, அருகில் தோழர்.விடுதலை.ராசேந்திரன்,கோவை.ராமகிருஷ்ணன்,லோகு.அய்யப்பன்,பாமக சட்டமன்ற உறுப்பினர்.வேல்முருகன்


மாவீரர்களுக்கு தீப அஞ்சலி

புதுவை மாநிலத் தலைவர்.லோகு.அய்யப்பன் உரை


தோழர்.கொளத்தூர்.மணி உரை





தமிழர் விடுதலை வரலாற்றில் நவம்பர்-26


தமிழீழ மண்ணில்,விதையாக விழுந்து தமிழீழமாக எழவிருக்கும் மாவீரர்களுக்கு வீரவணக்கம்!












1954-





வரலாறு, தமிழர் விடுதலைக்கு வல்வெட்டித்துறை.வேலுப்பிள்ளை பிரபாகரன் என்னும் போராயுத்தத்தை தந்த நாள்.




பிரபாகரன் -மாற்றானுக்கு மண்டியிடாத மாவீரம்!




நற்குடிபிறப்பான இவனே,இவன் மட்டுமே தமிழினத்தின் தனிப்பெரும் தலைவன்!





தமிழினத்திற்கு, காலத்தின் கொடையாக கரிகாலன் கிடைத்த தினம் : நவம்பர்-26



ஆயுத குவியலோடு வந்த உலக வல்லாதிக்கங்களாலேயே நெருங்கமுடியாத மணிமுடியை, தன் மழலை சிரிப்பை மட்டுமே காட்டி தொட்டு விளையாடும் தமிழ் குழந்தை .












1957-






உலக வரலாற்றில்,எந்த நாட்டு அரசியல் சாசனமும், தன் நாட்டுமக்களை இழிமக்களாக குறிப்பிட்டதில்லை.




அறிவியக்க தலைவர் பெரியார் இந்த வினைக்கான எதிர்வினையை மிக சரியாக ஆற்றினார்.





தமிழர்களை இழிவுபடுத்தும் அரசியல் சாசனத்தை எரிக்க பெரியார் தேர்ந்தெடுத்த நாள்: நவம்பர் -26






தமிழர் விடுதலை வரலாற்றில் நவம்பர்-26 மைல்கல்!













பெரியார் தி.க சென்னை பொதுக்கூட்டம்










சிறைக்குப் போகாத சிங்கம் அன்புராஜ்!

மானமிருந்தால் நம்ம நாட்டில் பாப்பாரகுஞ்சு இருக்குமா? இருந்துவிடமுடியமா? ஒரு பய,நம்ம முன்னாள் பூணூல போட்டுடு வருவானா?


(19/12/1973 -திராவிடர்கழகத் தலைவர்.தமிழர்தலைவர்.பெரியார் தனது 95-ஆம் வயதில்,மரணிப்பதற்கு 5நாட்களுக்கு முன்னதாக,இன இழிவு ஒழிய முழங்கிய மரணசாசனம்)






36 ஆண்டுகளுக்கு பிறகு......





நாம் கடவுள் இல்லை, ஜாதி இல்லை, மதம் இல்லை என்று பேசுவது மட்டும் முக்கியமல்ல; மற்றவர்களிடம் அன்பு காட்டவேண்டும், பாசம் காட்டவேண்டும்.

(5/11/2009 -தி.க தலைவர்.கி.வீரமணி முனங்கியது)






















சோரமணி : கட்டுப்பாடு என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்து,ஒழுங்கு நடவடிக்கையினால் வெளியேற்றப்பட்ட பின்பும்,இயக்கத்திற்கு புதுரத்தத்தை பாய்ச்சினால் உங்களுக்கு குதர்க்கப் பார்வை ஏன்?






சூரமணி : அப்படியானால் இத்தனை நாளும்,தி.க பென்சனர் அசோசியனாக தான் இருந்ததா? புதுரத்தம் பாய்ச்சியதில் தப்பில்லை!
ஆனால்,உலகத்தலைவர்.பெரியாரின் இயக்கத்திற்கு குடும்பரத்தம் பாய்ச்சுவது தான் நெருடுகிறது.





சோரமணி : எங்கள் இயக்கத்தில் என்ன நடந்தால்...உங்களுக்கென்ன? ஏன் கட்சியை விட்டு நீக்கிய பிறகும் மூக்கை நுழைப்பதேன்?வேறு வேலையே கிடையாதா? உங்களுக்கு........





சூரமணி : ஏணடா, நாங்கள் என்ன கடலூர்.கிருஸ்ணமூர்த்தி-மீனாட்சி அம்மாள் அறக்கட்டளை குறித்தா பேசுகிறோம்.
அப்படி அறக்கட்டளைக்கு அன்புராஜை வாரிசாக்கினால் நாங்கள் ஏன் கேட்கப் போகிறோம்?
இப்ப, விஜயகாந்த் ஆண்டாள்-அழகர் அறக்கட்டளைக்கு தனது மகனை தான் வாரிசாக்குவார். யாராவது கேட்கமுடியமா?
சினிமாவில் பல்டி அடித்து அவர் சம்பாதித்துள்ளார். அவரது மகன் வருவார்....அவரது பேரனும் வருவார்.
விஜயகாந்தை விட பல்டி அடிப்பதில் கில்லாடியாயிற்றே உங்கள் தல வீரமணி! அவர் சினிமாவில் பல்டி அடித்தோ, அரசியலில் பல்டி அடித்தோ கட்சி நடத்தட்டும்...தனது மகனை தலைவராக்கட்டும்! பேரனை செயலாளராக்கட்டும்!! யார் கேட்டது?





வாரிசு அரசியலுக்கு பெரியாரியக்கம் என்ன சங்கரமடமா?என்பது தான் எங்கள் கேள்வி.





சோரமணி : தந்தைபெரியாரின் கொள்கைகளை வென்றெடுக்க வீரமணியை விட்டால் யார் இருக்கிறார்கள்?





சூரமணி : இந்த பழய ரெக்கார்ட மாத்துங்கடா,
ஆங்கில நூல்கள்,சுயமுன்னேற்ற/ஆரோக்கிய நூல்களின் பகுதியை 'சுட்டு' வாழ்வியல் சிந்தனைகள் என்ற பெயரில் வீரமணி புத்தகம் எழுதி...அப்பாவி பெரியார் தொண்டர்களின் தலையில் கட்ட...அவர்களோ பெரியார் எழுத்துக்கள் எனும் அமிர்தம் இருக்க, வீரமணியின் சுட்ட எழுத்துக்கள் எனும் சர்பத் விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.





அடேய், இதை எழுதவா விடுதலை ? விகடனில் எழுதலாமே!





வீரமணி, சுகபோகனந்தா,நித்யானந்த பரமஹம்சர் எனற அளவோடு நின்றால் பரவாயில்லை!






கணிணி கற்று கொள்ளுங்கள் என்பது ஒரு சிந்தனை முத்து.
தனது குடும்பத் தொலைக்காட்சிகளுக்காக அரசு செலவில் தொலைக்காட்சி வழங்கும் அண்ணனின் இளவல் என்பதை நிருபிக்க,அன்புராஜின் நிறுவனத்தில் கணினி கற்றுக் கொள்ளுங்கள் என்றே நேரடியாகச் சொல்லவேண்டியதுதானே?





இது தான் பெரியார்கொள்கையை வென்றெடுப்பதா?



ஆனால்,இப்ப தான் புரிகிறது...நாங்கள் தந்தை பெரியார் என்று நாங்கள் முழங்குவதற்கும், தந்தை பெரியார் என்று வீரமணி முனங்குவதற்கும் உள்ள வேறுபாடு!





சோரமணி :அப்படி என்ன வித்தியாசம்? நாங்கள் சொல்வதற்கும் ? நீங்கள் சொல்வதற்கும்??





சூரமணி : பூச்சிகளாய்,புன்மைதேரைகளாய், சாதீய இழிவிலிருந்த தமிழினத்திற்கு தன்மானத்தை கற்றுத் தந்த இனமான ஏந்தல் அவரே என்பதால்....




இன்றும், இந்திய சேற்றில் உழலும் தமிழனுக்கு...1938 ஆம் ஆண்டே செப்டம்பர் 11 அன்று சென்னை கடற்கரையில், "தமிழ்நாடு தமிழருக்கே" என்ற வரலாற்றுப் பிரகடனத்தை தந்த கலங்கரை விளக்கம் - அவரே என்பதால் தந்தைபெரியார் என முழங்குகிறோம் நாங்கள்!






சோரமணி : அப்ப, வீரமணி சொல்வது எதற்காம்?





சூரமணி : தந்தை பெரியார்,தந்தை பெரியார் என்று சொல்லி....தாததா சொத்து, பேரனுக்கு என்று அன்புராஜை உட்கார வைக்கத் தான்...





சோரமணி :அன்புராஜீன் வருகையை பார்த்து பார்ப்பனர்கள் பயந்து விட்டார்கள் தெரியுமா?





சூரமணி : ஆமாண்டா, தஞ்சை பொதுக்குழுவில் அன்புராஜ் அடுத்த வாரிசாக அறிவிக்கபட்ட உடனே....சிதம்பரம்,திருவரங்கம்,கும்பகோணத்திலிருந்தெல்லாம் பாப்பார பசங்க எல்லாம் முட்டை முடிச்சோட கிளம்பி திருத்தணி பக்கத்தில,ஆந்திரா பார்டரில் குடிசை போட்டு உட்கார்ந்திருக்கான்....




செய்தி வந்தவுடனே,பார்ப்பன சேரிகளுக்கெல்லாம் இந்திய அரசு துணை ராணுவத்த காவல் போட்டுருக்கு...பாரு!

சிறைக்கே போகாத சிங்கம் அன்புராஜை பார்த்து பார்ப்பனர்கள் பயந்து நடுங்குகிறார்கள் என்ற செய்தியை விடுதலையில் படித்து..... அய்யா சொன்ன மாதிரி பின்பொறியால் தான் சிரிக்க முடிந்தது.





அதவிட, பெரிய சந்தேகம், விடுதலையின் ஆசிரியர் கடலூர்.(வீர)மணியா? கவுண்டமணியா? என்பது தான்..





சோரமணி : இயக்கத்தைப் பற்றி வெளியாட்கள் விமர்சிக்கத்தேவையில்லை.





சூரமணி : தகரத்திற்கு தங்கம் கொடுக்க நன்கொடை வாங்கும் போது மட்டும் நாங்க தமிழன்...அது எங்க வரலாற்று கடமை,பங்களிப்பு.
லிபர்ட்டி கிரியேஷனுக்கு 95 லட்சம் அரசு தந்த பின்பும்....பெரியார் தொண்டர்கள் எங்கிருந்தாலும்..பெரியார் படத்திற்கு பங்களிப்பு தரணும்.....
அதே லிபர்ட்டி கிரியேஷனுக்குள்ளேயும், அன்புராசு வந்து குதிச்சா...நாங்க கேள்வி கேடகக் கூடாது.





என்னடா உங்க கொள்கை தெளிவு ? இது தான் அறிவு நாணயத்தை மொத்த குத்தகைக்கு எடுத்த லட்சணமா?






ஏண்டா, கருப்பு சட்டை போட்டு நாத்திகம் பேசுற பெரியார் ஏன் அனைத்து சாதியினரும் அர்ச்சராகணும் பேசினாரு?





பெரியாரிஸ்ட் எல்லாம் கோயிலுக்கா போறோம்? நாம ஏன் தமிழ் அர்ச்சனை கேட்கறோம்?





ஆத்திகத் தமிழனுக்கான இழிவை துடைக்கவும்...தமிழ் நாட்டு ஆலயங்களில்,வழிபாடு மொழியாக நம் த
மிழே இருக்க வேண்டும் என்பதற்காக.....





பக்தி போதையில் இருக்கிற தமிழன், உங்களுக்கு தான் கடவுள் நம்பிக்கையிலையே? நீங்க ஏன் கோயில பற்றி பேசுறீங்க ? கேட்கிற மாதிரி கருப்புசட்டைய போட்டுக்கிட்டு முட்டாள்தனமா கேட்காதே!





தமிழ்நாட்டு கோயிலில் பார்ப்பன மனுநீதி!





பெரியார் திடலில் வீரமணியின் மனுநீதி !!





சோரமணி : இது ராணுவக் கட்டுபாடு மிக்க இயக்கம்!





சூரமணி : குமுதம் ரிப்போர்ட்டர் பேட்டியில், தோழர்.கொளத்தூர்.மணி சொன்னது போல, பொத்தனூர்.சண்முகம்,உரத்தநாடு குணசேகரன்,வழக்கறிஞர்.அருள்மொழி ஆகியோர் களப்பணிகளுக்கும்,பேச்சாளர்களாகவும் காலம் காலமாக பணியாற்றிக் கொண்டே இருக்கவேண்டும்.
பெரியார் தி.க தோழர்கள் மிகவும் மதிக்கும்,திராவிடபேரியக்கத்தின் கருத்துக் கருவூலம் அய்யா.கலிபூங்குன்றன் காலத்திற்கும் எழுதிகொண்டே இருக்க வேண்டும். ஆனால், வீரமணியும்,அவரது குடும்பவாரிசுகளும் மட்டுமே, தலைமை பதவிக்கு தகுதியானவர்கள். இதுவா ராணுவக் கட்டுபாடு?






பொதுக்குழு/செயற்குழு/வெங்காயகுழுகளை எல்லாம் தாண்டிக் குதித்து..."நான் ஆணையிட்டால்" என்று வீரமணி வீட்டுப் பிள்ளை குதித்திருக்கிறாரே!





"ராசுக்குட்டி" மாதிரி இருந்த அன்புராசு வரும்போது, அவரைவிட நிர்வாகத்திறனிலும்,களப்பணியிலும்,வாதங்களை எடுத்து வைப்பதிலும்,மேடை பேச்சிலும்,குறிப்பாக பெரியார்,திராவிட இயக்க கருத்தியலில் தெளிவான சிந்தனைக் கொண்ட பலர் மறைக்கப்படுவது ஏன்? என்பது பெரியார் தி.க தோழர்களின் கேள்வி அல்ல!





தி.கவிற்குள்ளேயேயும், பெரியார் கொள்கையோடு வாழ்ந்துகொண்டிருப்பவர்களின் கேள்வி!





குமுதம் ரிப்போர்ட்டர் குறிப்பிட்டது போல, இங்கேயும் வாரிசு அரசியல் வந்துவிட்டதே! என அங்கலாய்த்தவர்களின் கேள்வி!!





தஞ்சை பொதுக்குழுவிற்கு வந்து, சாப்பிடாமலே சென்று சுயமரியாதையை தக்க வைத்துக் கொண்டவர்களின் கேள்வி!!!






சோரமணி : என்ன வேண்டுமானாலும் பேசுங்கள்! எங்களுக்கு தெரிந்தது எல்லாம் ஆசிரியர்,ஆசிரியர்,ஆசிரியர் தான்....






சூரமணி : ஆனால், உங்கள் ஆசிரியருக்கு தெரிவது எல்லாம் பெரியார் தி.க தோழர்கள் கொளத்தூர்.மணியும், கோவை.இராமகிருஷ்ணனும் தான்.






சோரமணி : எப்பிடி?





சூரமணி : 5ந் தேதி பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கணினி படிக்க வேண்டும்..என்றெல்லாம் கப்சா விட்டுக் கொண்டிருந்த கடலூராரின் கண்ணில்..."பாவம் போல" உட்கார்ந்திருந்த சிறப்பு அழைப்பாளர் அன்புராஜ் பட்டுவிட்டார்.
உடனே, வீரமணிக்கு ஜீ.வியில் தோழர்.கோவை.இராமகிருஷ்ணன் கேட்ட கேள்வியும்,குமுதம் ரிப்போர்ட்டரில்,தோழர்.கொளத்தூர்.மணி கேட்ட கேள்வியும் நினைவுக்கு வர....B.P எகிற,தத்துவமுத்துகளை கொட்டி திர்த்துவிட்டார்.





"சிறைக்குப் போனால்தான் தியாகமா? சிறைக்குப் போனால்தான் தியாகம் என்றால், சிறைக்குச் சென்ற அத்துணை கிரிமினல்களும் தியாகிகளா? அப்படிப்பட்டவர்கள்தான் பதவியைப் பெறத் தகுதி உள்ளவர்கள் என்று சொல்ல முடியுமா?" (விடுதலை 7/11/2009 பக்-4)





போராட்டகளங்களையே,திராவிடர் கழகத்தின் வரலாறாக்கிய பெரியாரின் இயக்கத்தின் தலிவரின் பேச்சு இது.





சோரமணி : ஒரு flow-ல பேசி இருப்பாரு? அதுக்குப் போயி..........திரிபுவாத திம்மன் என்பது எல்லாம் over...





சூரமணி :கருப்புச் சட்டைப் போட்டுக் கொண்டு சிந்திக்க மறுக்கும் உன்னை விட, பட்டைப் போட்டுக் கொண்டு சிந்திக்க மறுக்கும் ஆத்திகனே மேல்!