தமிழன் உயிரின் விலை :5 லட்சம்‏

கடந்த மார்ச் -5 ந்தேதி, இராமேஸ்வரம்.தங்கச்சி மடம் மீனவர் கிறிஸ்டி சிங்கள ராணுவத்தின் வெறித்தாக்குதலாக்குள்ளாகி உயிரிழந்தார். தமிழக முதல்வர். மாண்புமிகு.மு.கருணாநிதி அவர்கள் இறந்த மீனவர் குடும்பத்திற்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பீட்டை அறிவித்தார். கூடுதல் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று மீனவர் சங்கங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று ,கூடுதலாக 4லட்சம்அறிவித்துள்ளார்.
மொத்தத்தில்..தமிழினத்தலைவர், சிறீலங்கா கடற்படை காவு கொண்ட தமிழ்நாட்டு தமிழனின் உயிருக்கு 5 லடசத்தை விலையாக நிர்ணயித்துள்ளார்.
இன வெறியன். மகிந்த ராஜ பக்ஸே, உலக நாடுக்ளில் கையேந்திப் பெற்ற ராணுவத் தளவாடங்களுடன், புலிகளிடம் மோதுவது என்பது சிங்களத்தின் எண்விளையாட்டிற்கு மட்டுமே பயன்படுகிறது. இலங்கை தீவின் வடக்கில், சிங்கள ராணுவத்தினரின் வினைக்களுக்கு, தென்னிலங்கையில், புலிகள் எதிர் வினையாற்றி வருவதை சிங்களத்தால் சகிக்க முடியவில்லை. திருப்பித்தாக்கும் புலிகளிடம் ஆயுத பலத்தை பயன்படுத்துவதை விட அப்பாவி தமிழக மீனவர்களிடம் தனது "பராக்கிராமத்தை" காட்டி தமிழ் இரத்த தாகத்தை தீர்த்துக்கொள்கிறது சிங்கள ராணுவம்.
வேதனை என்னவென்றால்...தமிழக மீனவனை, புலிகளே கொன்றதாக,தமிழ்நாட்டுத் தலை நகரிலிருந்தே.... சிங்கள ஓநாய் ஊளையிடுகிறது.


சிறீலங்காவின் ராணுவத் தளபதி.சரத் பொன்சேகா இந்தியாவில், அமைதிக்காக மணி ஆட்டுவானாம் !


சிறீலங்கா நேவியோ, இந்திய மீனவனுக்கு சாவுமணி அடிப்பானாம்!!


பொங்கும் தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிஜமெனச் சங்கே முழங்கு

என்று சங்க நாதம் செய்த புரட்சிகவிஞரின். தோழரும், தமிழர் தலைவர்.பெரியாரின் ஈரோட்டு குருகுல மாணவருமான கலைஞர், இறந்த மீனவர் குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாய் இழப்பீட்டை அறிவித்ததோடு, இந்திய பிரதமருக்கும் ஒரு கடிதம் எழுதி தனது வரலாற்றுக் கடமையை முடித்து விட்டார்.