சோரமணி Vs சூரமணி

சோரமணி : தமிழருவி மணியன், காங்.பொதுசெயலாளர் பதவியை ராஜினாமா செய்ததற்கு புதுவை இளைஞர் அமைப்பு பாராட்டுத் தெரிவித்து சுவரொட்டி ஒட்டுவது ஏன்? இப்படி வீரியம் பேசினா, என்னக் காரியம் நடக்கும்??



சூரமணி: காங்கிரஸிலிருந்தாலும், பதவிக்காக சொக்கத்தங்கமே, சோனியாவே,,என கவிதைப்பாடாமல்.....
எந்தப்பிடிப்புமின்றி..முதுகெலும்பு பழுதுபடாத அவரின் தமிழினப்பற்றைப் பாராட்டியிருக்கிறார்கள்.
அவருக்கு வேட்டி முக்கியம். துண்டை தூக்கி எறிந்துவிட்டு வந்து விட்டார்.கதர் அணிந்தாலும்,"காரியம்" ஆகவேண்டும் என்பதற்காக காக்கா பிடிக்கத்தெரியாதவர்! உனக்கெதுக்கு இந்த வேலையெல்லாம்! உன் வழிசல் அறிக்கையை ரெடி பண்ணு போ! போ!!