
ஈழமக்களையும் விடுதலைப் புலிகளையும் ஆதரித்து பேசியதற்காகவே ஈழ மக்களின் பணத்தில் உலகம் முழுக்க இன்ப சுற்றுலா சுற்றி வந்த உதிரிகள், இன்று கருணாநிதி - காங்கிரசின் ஈழத்தமிழர்களின் எதிர்ப்பை நியாயப்டுத்திக் கொண்டிருக்கிறர்கள்.
-நன்றி : வே.மதிமாறன்
ஈழத்தமிழர்களின் துயரம் தமிழின உணர்வாளர்களை அம்பலப்படுத்தியது பதிவிலிருந்து...
இவரும் அப்படித் தானா?
90' களின் இறுதியில்...பேரா.சுப.வீ, தனது மேடைப் பேச்சுகளில், கலைஞர் எதிர்கட்சித் தலைவராக இருக்கும் போது தமிழராக இருப்பார். முதலமைச்சராகிவிட்டால் இந்தியராகிவிடுவார் என்ற வரலாற்று உண்மையை தெளிவாக விளக்கிப் பேசுவார்.
ஆனால், இந்தியகலைஞரை, தமிழராக்கச் சென்ற பேரா.சுபவீயும் முதல்வராகாமலேயே, இந்தியராகிவிட்டார்.
கருணாநிதியின் "அலெக்சாண்டர்- போரஸ்" பேச்சுக்கு "கை"த் தட்டி ஆதரவு தெரிவிக்கிறார் இன்றைய இந்திய சுப.வீ.
தமிழர்.சுப.வீ யாக இருந்திருந்தால்,தேர்தல் தோல்வியினால், தி.மு.க ஆட்சி இழந்தால் கருணாநிதியை முன்னாள் முதல்வருக்குரிய மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று ஜெயலலிதாவிற்கு அதே மேடையில் கோரிக்கை வைத்து கருணாநிதியை நிலை குலையச் செய்திருப்பார்.
சினிமா போதையில் சீரழிந்து கிடக்கும் இளைஞர்களை சுட்டிப் பேசும் சுப.வீ" ஒரு நடிகனின் படத்தை ரசிப்பது என்பது வேறு ! ஒரு நடிகனுக்கு ரசிகனாக இருப்பது என்பது வேறு !! என்று பேசியிருக்கிறார்.
அதைப் போலவே, ஒரு தலைவரின் அரசியலை ஆதரிப்பது என்பது வேறு! அந்த தலைவரையே ஆதரிப்பது என்பது வேறு !! என்பது அறிவு ஜீவிக்கு புரியவில்லையா?
அன்று கருணாநிதியின் " மஞ்சள் சால்வை" யில் கூட சமரசம் செய்து கொள்ளமுடியாத சுப.வீ, சொல்லினும் செயல் வலியது என கட்டுரை தீட்டினார்.
இப்போது தான் புரிகிறது அது எல்லாம் நந்தனின் "Sponsored Programme" தான்! என்று.....
புலி ஆதரவாளர் என்பது தன் மீதான முத்திரை அல்ல. தன் முகவரியே அது தான் என முழங்கிய சுப.வீ யா? இப்படி.....
கலைஞர் டி.வி யில் ஊருக்கு ஒன்றே சொல்லும், நன்றே சொல்லும் சுப.வீ, ஈழக் கொடுமைகளை பாராமுகமாய் இருக்கும் கலைஞர் செய்திகளுக்கு முதலில் அந்த " நன்றை" சொல்லவேண்டாமா?
அந்த " நன்றை" சொல்லவிடாமல் தடுப்பது எது??
ரஜ பக்சே தமிழினத்தின் தலையில் குண்டு போடுகிறான்!
சுப.வீ யோ, அவரின் பேச்சாலே இன உணர்வு கொண்ட இளைஞர்களின் தலையில் கல்லைப் போட்டுவிட்டார்!!
பின் குறிப்பு : - ஆல் இன் ஆல் அரசியல் விமர்சகர் மதிமாறன் "பெரியார் தி.க" விற்கு சான்றிதழித்திருப்பதற்கு நன்றி தெரிவித்து, அவரின் விமர்சனத்திற்கு பதிலுரையாக தோழர்.பெரியார் வலைப்பூவின் இடிந்துரையும் இணைக்கப்பட்டுள்ளது.