நோகாமல் நொங்கெடுக்கும் கடலூர்.வீரமணி.


காலையில் போராட்டம்,மாலையில் விடுதலை என்ற மனப்போக்கிலிருந்து நம் தோழர்கள்
விடுபட்டு...குறைந்தபட்சம் 15 நாட்கள் சிறைக்காவது தயார்படுத்திக் கொள்ளவேண்டும்.நமது போராட்டத்தை, நமது பெரியார் முழக்கத்தில் வெளியிட்டு நாமே படித்து மகிழ்வதால்

ஈழத்தமிழர்களுக்கு பயன் ஒன்றுமில்லை.உண்மையான தீர்வுக்கான போராட்டத்தை நாம் முன்னெடுக்கவேண்டும்.


16-ஆகஸ்டு அன்று
சென்னிமலை-தமிழின பாதுகாப்பு இயக்கத் துவக்க விழாவில் தோழர்.கொளத்தூர்.மணி ஆற்றிய
உரையிலிருந்து...






ஈழத்தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டு, மீதமிருப்பதாக கணக்கு காட்டப்படும் சுமார்.
2,800,000 தமிழர்களும் முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப் பட்டு கிடக்கிறார்கள்.கஞ்சிக்கே கையேந்தி நிற்கிறது ஈழத்தமிழினம்.

வரும் மழைக் காலங்களில் முகாம் தமிழர்கள் எதிர்
கொள்ள இருக்கும் அவதிகளை நினைத்து மனிதாபிமானம் கொண்டோர்கள் மனம் கலங்கி நிற்கிறார்கள்.


செப்-2 ந்தேதி,வல்லம் நிகர் நிலை பல்கலை கழக வேந்தர்.கடலூர்.வீரமணி "தடையை" மீறி வதை
முகாம் தமிழர்களை விடுதலை செய்யக் கோரி போராட்டத்தை நடத்திக் காட்டிவிட்டார்.

தனது பை பாஸ் இதயத்திலிருந்து வழிந்த ரத்தத்தை துடைத்துக்கொண்டே பேசிய வேந்தர்.வீரமணி,முகாம்
வாழ் ஈழத்தமிழர்களைவிட தனது அண்ணன் கருணாநிதிக்காகவே அதிகம் கவலைப்பட்டு
உரையாற்றியுள்ளார்.

நிகர் நிலை பல்கலைகழகத்திற்கு வேந்தராக்கி,பெரியார் நூல்களை நாட்டுடைமையாக்காமால்,வீரமணியே
மரபுரிமை வாரிசு என்று "சான்றழித்த" அண்ணனுக்கு இளவலின் நன்றியுணர்வைக் காட்ட நல்வாய்ப்பாக
கிடைத்துவிட்டது ஈழத்தமிழர் போராட்டம்.

பயன்படுத்திக் கொண்டார்.

பயன்படுத்திக் கொள்வது தானே இந்த ஆசிரியரின் பாடம்!

பகுத்தறிவு !!

பயனுள்ள அரசியல்
பிழைப்பு!!!

மத்திய அரசு, கலைஞரின் வலியுறுத்தலை அலட்சியப்படுத்தினால் மக்களை திரட்டிப் போராட்டம்
நடத்துவேன் என்று சூளுரைக்கிறார்.

மிச்ச சொச்சம் இருக்கும் கருஞ்சட்டை கொள்கைகாரர்களும், கழகத்திலிருந்து விலகிக் கொண்டு
இருக்க...மக்களை திரள் போராட்டம் என்று காமெடி பண்ணுகிறார்.

போராட்டத்தில் கூட மத்திய அரசு என்றே குறிப்பிட்டு பேசுகிறார். சோனியா,மன்மோகன் என்ற பெயரை
சொல்லக் கூட கோபாலபுரத்திலிருந்து அனுமதி வாங்காமல் வந்துவிட்டார் போலும் இந்த கொள்கை
சிங்கம்.


இப்போராட்டத்தில்,500பேர் கைதானதாக தமிழீழ ஆதரவு இணைய தளமான தமிழ் வின் செய்தி
வெளியிட்டுள்ளது.

தினமணியோ 556 பேர் என்று கணக்கு சொல்கிறது.

விடுதலையோ 2000 பேர் கைதானதாக சொல்கிறது.

காக்கா பிடிக்க இரயிலை மறிக்கச் சென்ற இப்போராட்டத்தின் இன்னொரு காமெடி பீஸ்:பேரா.சுபவீ.

வீரமணிக்கு கருணாநிதியை ஆதரிக்க மறியல் போராட்டம்!


வீரபாண்டியனுக்கு அய்யா.நெடுமாறனை எதிர்க்கவே இந்தப் போராட்டம்!!


பரமக்குடியில் பேசிய நெடுமாறன்,கருணாநிதியை முதல் எதிரி என்று பேசியதை சுட்டிப் பேசியிருக்கிறார்
நாட்டுக் கோட்டை பெற்றெடுத்த இந்த கொள்கை கோமான்.

பாரெங்கும் பரவி வாழும் ஈழத்தமிழினம் மொத்தமும் கருணாநிதியை அப்படித்தானே சொல்கிறது.


நெடுமாறனை மட்டுமே பார்த்து அரசியல் நடத்தும் சுபவீக்கு, ஈழத்தமிழர்கள் கதைப்பதும்,கொதிப்பதும்
தெரியாமல் இருக்காது.தெரிந்தும் தெரியாதது போல் நடித்துப் பார்க்கிறார் இயக்குனரின் இளவல்.

மதுரை.வெண்மணி பெரியார் திடலிலே, காட்டுமிராண்டிதனமாகத் தாக்கப்பட்டபோது...கண்டனகுரல்
எழுப்பியவர் சுபவீ.

தோழர்.கொளத்தூர்மணி கருநாடக அரசால் கைதான போது, "எங்கள் மணி அண்ணனின் தியாகம்
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியின் தியாகத்திற்கிடானது என உரத்த குரலெழுப்பியவர் சுபவீ.

அதே வீரப்பன் பிரச்னையில்,கருணாநிதிக்கு சங்கடத்தை தீர்த்து வைத்ததற்காகவே கொளத்தூர்.மணியைகழகத்தை விட்டு நீக்கிய வீரமணியோடு சுபவீக்கு கொள்கை கூட்டணி.

மற்றவர்கள் செய்தால், நாம் "நடுநிலைமை" என மனதைத் தேற்றிக் கொள்ளலாம்.ஆனால், நடுநிலைமை என்பதே அயோக்கியத்தனம் என மேடையில் முழங்கிய சுபவீ விடயத்தில் நாம் என்ன செய்வது?

ஊரில் உள்ள பெரிசுகள் தனது சொந்த சோகத்தை, ஊரில் ஏதாவது இழவு விழுந்தால், அங்கு போய் அழுது ஒப்பாரிவைக்கும் கதை தான் இந்த ரயில் மறியல் போராட்டம்.







2009- செப்டம்பர்- 2 ந்தேதி போராட்டத்தில் வேந்தர்.வீரமணி 46 வது தடவையாக கைது செய்யப்பட்டு
ஜெயிலுக்குப் போனார்.


எல்லாரும் பார்த்துக்கோங்க !எல்லாரும் பார்த்துக்கோங்க !!

அவரும் கொள்கைவாதி தான்...

ஜெயிலுக்குப் போறார்.

அவரும் கொள்கைவாதி தான்...

எல்லாரும் பார்த்துக்கோங்க !எல்லாரும் பார்த்துக்கோங்க !!






பின்குறிப்பு: ரயில் மறியல் போராட்டத்தால் எந்த ரயிலும் காலதாமதமாக புறப்பட்டதாகவோ, ரத்து செய்யப்பட்டதாகவோ தென்னக ரயில்வே செய்தி குறிப்பு எதிலும் தெரிவிக்கவில்லை.



0 உங்கள் கருத்துக்கள்: