சூரமணி : என்னய்யா, சோரமணி எதையோ எழுதுரமாதிரியே போஸ் கொடுத்துட்டு இருக்கே?
இந்த தொகுப்பாசிரியர் வேலைக்கே உன் பில்ட் அப் தாங்கமுடியலையே...
நீ எல்லாம் திருவாரூர்.தங்கராசு அய்யா மாதிரி கிரியேட்டிவா எழுதினா... போஸ் கொடுத்தே கேமிரா லென்சை ரிப்பேராக்கிடுவ போல....
சோரமணி : கருஞ்சட்டை இயக்கத்திற்கும்..கதர் சட்டை இயக்கத்திற்குமான வரலாற்றுத் தொடர்பை நோட்ஸ் எடுத்துட்டு இருக்கேன்.
சூரமணி : பச்சைத் தமிழர்.காமராசர் தவிர்த்து மொத்த காங்கிரசுமே தமிழின விரோத கும்பல் தானே?
அந்த நரகலில் அரிசி பொறுக்குற வேலை எதுக்கு?
சோரமணி :எல்லாம் சரி தான்!காங்கிரஸ்கட்சியை பலப்படுத்த ராகுல் வந்தாராமே... இன்னும் 5 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கப் போகுதாமே. அதான் முன்னேற்றப்பாடாக இந்த முயற்சி.
சூரமணி : நீ வேந்தராகவே பவனி வர, வேண்டிய முயற்சி தான்..
சோரமணி :(தலையை சொரிந்து கொண்டே) என் பையனும்...
சூரமணி : பூனைக்குட்டி வெளியில் வந்தது தெரிந்த கதைதான்.
வந்த அறிவாளி,உஙக முதல்வரை சந்திக்கவில்லை, அவரது வாரிசு கனவிற்கெதிராக..5 ஆண்டுகளில் காங்.ஆட்சி என்றெல்லாம் ஆருடம் சொல்லியிருக்கிறாரே.
சோரமணி :ம்ம்ம்...
சூரமணி : வாகரை தொடங்கி..மடுவைத் தாண்டி வன்னிப் பெருநிலமெங்கும் ஈழத்தமிழரின் ரத்தம் ஆறாக ஓடியதே இந்தியாவை ஆண்ட,ஆளும் இந்த காங்கிரஸ் கட்சியினால் தானே?
கொத்து,கொத்தாக தமிழர்கள் கொல்லப்பட்ட போதும்,முசோலினி நாட்டுக்காரி. சோனியாவை "சொக்கததங்கமே" என வர்ணித்தது அந்த கரு நாக்கு தானே!
சோமாலியகுழந்தையைப் போல் தமிழீழ குழந்தைகள் எலும்பும், தோலுமாக மாறி,தாய்ப்பாலுமின்றி நா வறண்டு மாண்டபோது,இதே ராகுலை "இளஞ்சிங்கம்" என வருணித்தது உங்களின் தமிழின தலைவர் தானே !
ஆஹா,அதே இளஞ்சிங்கம் சரியாக கருணாநிதிக்கு வாலைத் தூக்கிக் காட்டியிருக்கிறதே!
வாலைத்தூக்கிக் காட்டினாலும், காலைத் தூக்கி ஆட்டினாலும் 2011 வரை காங்.தயவிலே தான் மைனாரிட்டி அரசை நகர்த்த வேண்டும்.அதற்கு பின் சுயமரியாதை வெள்ளம் கரை புரண்டு ஓடப் போகிறது. ஆனால்,இப்போதைக்கு முதல்வர் நாற்காலி தானே முக்கியம்.
சோரமணி :ம்ம்ம்......இன்னைக்கு அரிஸ்டாட்டில் என்று அய்ஸ் வைச்சுட்டேன்.நாளைக்கு யார் பேர சொல்றது? நானே சுயநலப் புத்தியை குழப்பிட்டு இருக்கேன், நீ வேற....தமிழன்,ரத்தம் னு புலம்பிகிட்டு...விமர்சனம் பண்றதே வேலையாப் போச்சு உங்களுக்கு.
0 உங்கள் கருத்துக்கள்:
Post a Comment