
.........ஏப்ரல் 24 ஆம் தேதியன்று ,இலங்கைக்கு 100 கோடி ரூபாயை நிதி அளிப்பதாக இந்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பிற்கு முன்பாக நடந்த விவாதங்கள் அனைத்திலும் CIDC கலந்து கொண்டது.
போர் முடிந்த ஐந்தாவது நாளில் - மே 23 ஆம் தேதியன்று - இலங்கைக்கான 100 கோடி ரூபாய் நிதியானது 500 கோடியாக உயர்த்தப்படுகிறது என்று இந்திய அரசு அறிவித்தது. முகாம்களில் உள்ள மக்களை மீள் குடியேற்றம் செய்வதற்காகக் கொடுக்கப்பட்ட இந்த நிதி குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு முன் நடந்த விவாதங்களிலும் CIDC முக்கியப் பங்கை ஆற்றியது.
சர்வதேச நிதியத்திடம் இருந்து மார்ச் மாதத்தின்போது இலங்கை அரசு கேட்டிருந்த 190 கோடி டாலர் நிதி உதவியை உடனடியாக வழங்க விடாமல் தடுக்கும் நடவடிக்கைகளில் மேற்குலக நாடுகளின் அரசுகள் ஜூன் மாதம் தொட்டு ஈடுபடத் தொடங்கின.
இந்தத் தடையை நீக்கிக் கொடுத்தால் வன்னிப் பகுதியின் மீள் உருவாக்கத்தில் கலந்துகொள்ள இந்திய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதாக மன்மோகன் சிங் அரசிடம் ராஜபக்சா அரசு உறுதி அளித்தது.ஜூன் இறுதியில் இருந்தே இதற்கான முயற்சியில் இறங்கிய மன்மோகன் அரசின் அழுத்தங்களுக்கு மேற்குலக அரசுகள் ஜூலை இரண்டாவது வாரம் வழி விட்டன. ஜூலை 15 ஆம் தேதியன்று எகிப்தில் நடந்த அணிசேரா நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்ட மன்மோகன் சிங் அங்கு ராஜபக்சாவை சந்தித்தார்.
சர்வதேச நிதியத்தின் கடன் இன்னும் ஒரு வாரத்தில் இலங்கைக்கு அளிக்கப்படும் என்ற செய்தியை அவர் தெரிவித்தார். அந்த செய்தி வெளியான அன்றே வன்னிப் பகுதியின் மீள் உருவாக்கத்தில் இந்திய நிறுவனங்கள் கலந்து கொள்வதை அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக ராஜபக்சா உறுதி கூறினார்.
ஜூலை 22 ஆம் தேதியன்று சர்வதேச நிதியத்தின் கடனுக்கான அனுமதி அறிவிக்கப்பட்டபோது, CIDC யும் இலங்கையின் கட்டுமான அமைச்சகமும் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் உள்ள கட்டுமானத் திட்டத்தில் இந்திய நிறுவனங்கள் கலந்து கொள்வதற்கான அனுமதியைக் கொடுக்கும் ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டன.........
நன்றி : http://tamilthavi.blogspot.com/2009/09/blog-post_2642.html
CIDC என்ற நிறுவனம் தமிழினத்தை நரவேட்டையாடிய ராஜபக்சே க்கு தோளோடு தோள் நின்று ஆதரவளித்த இந்திய அரசு நிறுவனம்.ராஜபக்சேவின் சிங்கள வெறி அரசுக்கு மனித உரிமைகளுக்காக மறுக்கப்பட்ட சர்வதேச நிதியை(190 கோடி டாலர் நிதி) வழங்குவதற்கு ஆவன செய்த நிறுவனம்.
இநத CIDC நிறுவனத்துடன் பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகம் ஒப்பந்தம் போட்டுள்ளது.இந்த விபரம் CIDC நிறுவனத்தின் இணையத்தளத்தில் காணக் கிடைக்கிறது.
இத்தனைக்கும் பிறகு,செப்-5 உண்மை இதழில் தஞ்சையில் சேகரன் என்ற நேயரின் கேள்விக்கு "கனவில்கூட ஈழத் தமிழருக்கு எதிரான நிலையை எடுத்திடுமா நமது அமைப்புகள் " என்று புளுகு முட்டையை அவிழ்த்து விட்டுள்ளார் கடலூரார்.
அட, தஞ்சையில் சேகரன்களுக்கா? பஞ்சம்!
ஒரு ரூபாய் மதிப்புள்ள சிறிலங்கா தேனீர் பாக்கெட்டில் கூட தமிழன் இரத்தம் சொட்டுவதாக பிரச்சாரம் செய்கிறார்கள் புலம்பெயர் ஈழத்தமிழர்கள்.

அய்ரோப்பிய ஒன்றியத்தின் 100 மில்லியன் டாலர் GSP+ சலுகையை சிறிலங்காவிற்கு ரத்து செய்யக் கோரி குதறும் குளிரில் வீதியில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறான் புலம் பெயர் தமிழன்.
190 கோடி டாலர் சர்வதேச நிதியை கொடியவன் ராஜபக்சே கையில் கொடுத்த நிறுவனத்துடன் கை கோர்த்து நிற்கும் வீரமணியின் கம்பெனி, இலங்கைத் திட்டத்தில் ஈடுபடாது என்று அறிவிக்கப்பட்டு விட்டது என A/C ரூமில் உட்கார்ந்து கயிறு திரிக்கிறார் வீரமணியார்.
பெரியாரின் உண்மையில்,தனது தலைவரின் முரசொலி பாணியிலே...கேள்வியும் கேட்டு...இப்படி அறிவாக...பதிலும் அளித்திருக்கிறார்.
இந்த உத்தமர், கட்டாரியால் குத்தி கொல்லவில்லையாம்! கட்டாரி வாங்கி கொடுத்தவனோடு கைகோர்த்து மட்டுமே நிற்கிறாராம்.
மானமுள்ள தமிழர்கள் அனைவரும் காங்கிரசை தமிழர்களின் நிரந்தர இனஎதிரியாகவே கருதி, 2009 நாடாளுமன்றத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து பிரச்சாரம் செய்த போது திமுகவின் வேப்பேரி வட்ட செயலாளராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் வீரமணியோ, சோனியா காங்கிரசுக்கு பிரச்சாரம் செய்தாரே! இதைவிட ஈழத்தமிழர்களுக்கு வேறு என்ன துரோகம் செய்து விட முடியும்?
http://erottukannadi.blogspot.com/2009/03/blog-post_13.html
அவரின் வரலாற்றுத்துரோகத்திற்கு சான்றிதழ் வழங்கும் வகையில் தானே வீரமணியின் கூடாராம் காலியாகிக் கொண்டுள்ளது.
கோவை தி.க மாவட்டத் துணைத் தலைவர் சொக்கம்பட்டி தண்டபாணி தொடங்கி மானமுள்ளத் தோழர்கள் தொடர்ந்து சான்றிதழ் வழங்கி கொண்டுள்ளனர்.
காரைக்குடி.கல்வி வள்ளல் அழகப்ப"செட்டியாரின்" நூற்றாண்டு விழா கமிட்டியார், வல்லம் கல்வி வள்ளல் வீரமணி மீதான விமர்சனம் என்றவுடன் பதறி வருகிறார்கள்.
குதர்க்கப் பார்வை என்று கண்டுபிடித்துவிட்டார் இளவரசன்.
"ஈரோட்டுக்கண்ணாடி" க்கு பொழிப்புரை வேறு!
ஈரோட்டுக்கண்ணாடி- தனிப்பட்ட யாருக்கும் கொடுக்கப்பட்ட சிறப்பு பெயரோ, பட்டம் அல்ல!
பெரியாரின் கொள்கையை ஏற்றுக்கொண்ட அனைவரும் பயன்படுத்தும் அடையாளச் சொல்.
வலைப்பூவின் பெயரே,இந்த தளம் பெரியாரிஸ்ட்களுக்கானது என்பதைச் சொல்லும்.
தனது வலைத்தளத்திற்கு செல்லாத்தா...மாரியாத்தா என்று பழமை நெடி வீசும் பெயரை வைத்திருக்கும் கொள்கை குருடர்களுக்கு ஈரோட்டுக்கண்ணாடி உறுத்தத் தான் செய்யும்.
முக்கிய குறிப்பு: தமிழர்தலைவர் என்பது தந்தை பெரியாரின் சிறப்பு பெயர்களில் ஒன்று.
பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்து நூலாக எழுதிய சாமி.சிதம்பரனார், அந்நூலுக்கு தந்த தலைப்பே தமிழர் தலைவர் என்பது தான்.
தான் ஆசிரியராக இருக்கும் விடுதலை நாளேட்டில் மட்டும் தன்னை "தமிழர் தலைவர்" என்று அச்சடித்து அழகு பார்த்துக் கொள்ளும் வீரமணியின் தொண்டர்களுக்கு ஈரோட்டுக்கண்ணாடி உறுத்தத் தான் செய்யும்.
குன்றக்குடி பல்கலைகழகத்தில் அச்சடித்து வாங்கிய சான்றிதழா?அது....
பெரியார் தொண்டர்கள் பெரிதும் மதிக்கும் கவிஞர். கலி பூங்குன்றன் அவர்கள் கூட தனது விடுதலை கட்டுரையில்,தமிழர் தலைவர் நூலைப் பற்றிக் குறிப்பிட்டு ஜாதி ஒழிப்பு ஜாம்பவானாகிய தந்தை பெரியார் அவர்கள் வாழ்க்கை வரலாற்று நூலின் தலைப்பையே அவர் கொள்கைக்கு எதிராக சிதைக்கிறார்களே என்று வெளிப்படையாக அங்கலாய்த்து,தமிழர் தலைவர் தலைப்பையே "சுட்டு" விட்டார்களே உள்ளுக்குள் தேம்புவதும் ஈரோட்டுக்கண்ணாடியின் வழியே தெரியும் நிதர்சனம்.
பெயரே அறியப்படாத சிற்றிதழில் வெளியான செய்திகளுக்கெல்லாம், வரலாற்று ஆதாரங்களோடு எழுத்துச்சாட்டை எடுக்கும் கவிஞர், பிரபல தமிழ் வார இதழான குமுதம் ரிப்போட்டர், வாரிசு நியமன பொதுக்குழுவை பற்றி தொலைபேசியில் அழைத்துக் கேட்ட போது, அன்புராஜ் தொடர்பாக நான் பேச முடியாது என்றதும் கூட அந்த தேம்பலின் தொடர்ச்சி தான்.
திராவிடர்கழகத்தின் பொதுசெயலாளரின் வரம்புக்கு அப்பாற்பட்டதா தலைமை நிலைய செயலாளர் பதவி? என்ற சந்தேகம் எழுகிறது.
இந்த சந்தேகத்தை திராவிடர் கழகத்தின் சட்ட திட்ட விதிகளை முழுதும் அறிந்த, நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு நடத்தும் திறனுள்ள வழக்கறிஞர்.துரைசாமியிடம் தான் கேட்டு தெளிய வேண்டும்.
தற்போது,வேப்பேரி.வீரமணி மடத்தில் வீ.அன்புராஜ் - இளையப் பட்டமாக பொறுப்பேற்றுள்ளார்.
இளையவருக்கு பெரியாரின் எந்த பட்டத்தை "சுட்டு"க் கொடுக்கப் போகிறார்களோ!
2 உங்கள் கருத்துக்கள்:
பெரியார் மடாலய சிறப்பு பரிகார பூசை:
பூசாரி வீரமணி சாமிகள்:சிறப்பு பூசை:மஞ்சல் துண்டு மகான்!
சொனியா விளக்கு(மாற்று) பூசை
மானமுள்ள தமிழர்கள் அனைவரும் காங்கிரசை தமிழர்களின் நிரந்தர இனஎதிரியாகவே கருதி, 2009 நாடாளுமன்றத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து பிரச்சாரம் செய்த போது திமுகவின் வேப்பேரி வட்ட செயலாளராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் வீரமணியோ, சோனியா காங்கிரசுக்கு பிரச்சாரம் செய்தாரே! இதைவிட ஈழத்தமிழர்களுக்கு வேறு என்ன துரோகம் செய்து விட முடியும்? //
:(
Post a Comment